மதுரையில் வாகன இ-பாஸ் பெற குவிந்த மக்கள்; சரியாக திட்டமிடாததால் மாவட்டஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது

வாகனங்களை குறிப்பிட்ட வேளைகளில் பயன்படுத்துவதற்கு மதுரையில் வாகன இ-பாஸ் பெற சமூக இடைவெளி விதியை மீறி குவிந்த மக்களால் மாவட்டஆட்சியர் அலுவலகம் வாசல் மூடப்பட்டது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது,மேலும்,மே மாதம் 3 ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.ஏற்கனவே 21 நாள் ஊரடங்கில் கையிருப்பை காலிசெய்திருந்த மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள். மேலும், 19 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று  பிரதமர் மோடி அறிவித்ததிலிருந்து மக்கள் திண்டாடி வருகிறார்கள்.20 ந்தேதிக்கு பின்னான ஊரடங்கு தளர்வையும் முதல்வர் தமிழகத்திற்கு அறிவிக்காததால் மக்கள் பெரும் சிரம்மத்திற்கு ஆளாகிறார்கள்.

இந்நிலையில் இருக்கிற காசில் ஏதேனும் வாங்கி வீட்டில் உள்ளவர்களின் பசியை போக்கி விடலாம் என்று வெளியே மார்கெட்டுக்கு வந்தால் போலீஸ் மறித்து வண்டியை பிடுங்கி வைத்துக்கொள்கிறது.வழக்கு போட்டு விடுகிறார்கள். இந்த கொரோனா நேரத்தில் தடை உத்தரவை பயன்படுத்தி வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு போட்டு 2.5 கோடிக்கு சம்பாத்தியம் செய்த ஒரே துறை தமிழக காவல்துறையே!அவர்களின் கடமை உணர்வு பாராட்டவேண்டியதுதான்.

ஒரு அவசர வேலையாக மாத்திரை வாங்க கூட  வெளியே வாகனத்தை எடுத்துகொண்டு செல்ல முடியவில்லை.மறிக்கும் போலீஸ்ஸிடம் டாக்டர் சீட்டிலிருந்து லைசென்ஸ் வரை காண்பித்து, அப்படியும் அவர் திருப்தி அடைந்தால்தான் நம்மை விடுவார். இல்லை என்றால் வழக்கு பதிவு செய்தி வண்டியை பிடுங்கி வைத்துக்கொள்கிறார்கள்.

இவ்வளவு அசௌரியங்களை எதிர்கொண்டு கொரோனாவையும் வீட்டுக்குள் அண்டாமல் பார்த்துகொண்டு, பசியையும் வெல்லவேண்டுமானால் பெரும் சவாலாக இருக்கிறது. வாழ்க்கையே வெறுத்து விடுகிறது!

இந்நிலையில், மதுரையில் வாகனங்களை குறிப்பிட்ட வேளைகளில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் இ-பாஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என தகவல் வெளியானது. 

அவ்வளவுதான், இ-பாஸ் வாங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது.ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து விட்டனர்   

தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்காமல் குவிந்த மக்களால் ஆட்சியர் அலுவலகம்,திக்குமுக்காடியது.சரியாக திட்டமிடப்பட்டு அறிவிக்காததால் வேறுவழியின்றி   மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் மூடப்பட்டது.

இதுகுறித்து  அலுவலர் ஒருவர் கூறும்போது “ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்கள் தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.  மீறுபவர்களுக்கு அபராதம், வழக்கு பதிவு, வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

இது மக்களுக்கு சிரத்தையாக இருக்கிறது ஆகையால் ,மதுரையில் வாகனங்களை குறிப்பிட்ட வேளைகளில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் இ-பாஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என அறிவித்ததில் பெரும்கூட்டம் கூடிவிட்டது” என்றார்

மேலும் “ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களில் பலர் சமூக இடைவெளி விதிகளை கடைப்பிடிக்காமல் வாகன இ-பாஸ் பெற குவிந்து விட்டனர்.  பலர் சுய பாதுகாப்பிற்கான முககவசம் அணியாமலும் சென்றனர்.

அவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.  எனினும், கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது.  இதனை தொடர்ந்து அதிகாரிகளின் உத்தரவின்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் அடைக்கப்பட்டது”.என்றார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top