இரு பத்திரிக்கையாளர்கள் கைது? காவல்துறை மீது கோவை பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம்!

கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் இந்நேரத்தில் பத்திரிகையாளர்கள் உயிரை பணையம் வைத்து பணியாற்றி வரும் சூழலில்,கோவை காவல்துறை இரு பத்திரிக்கையாளர்களை கொரோனா செய்தி வெளியிட்டதற்கு கைது செய்திருப்பதை கோவை பத்திரிக்கையாளர் சங்கம் கண்டித்து இருக்கிறது

பத்திரிக்கையாளர் சங்கம் கண்டித்தை தொடர்ந்து இரு பத்திரிக்கையாளரும் இரண்டு மணி நேரம் கழித்து விடுதலை செய்யப்பட்டார்கள் என சொல்லப்படுகிறது

கோவை சிம்ப்லிசிட்டி[ Simplicity Coimbatore ]ஆன்லைன் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் புகைபட கலைஞர் பாலாஜி என்பவரை இன்று காலை உதவி ஆணையர் ராமச்சந்திரன் விசாரணைக்கு வர சொல்லி உதவி இருக்கின்றார்  

விசாரணைக்கு காவல் நிலையம் வந்த பாலாஜியிடம் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் பாலாஜியை அமர வைத்துள்ளார்.

புகைபட கலைஞர் பாலாஜியை காவல் நிலையத்தில் உட்கார வைத்த தகவல் அறிந்த சக பத்திரிகையாளர்கள் வெரைட்டி ஹால் காவல் நிலையம் நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது உடன் இருந்த சிம்ப்லிசிட்டி செய்தியாளர் ஜெரால்ட்டையும் விசாரணைக்கு என அழைத்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் உதவி ஆணையர் ராமசந்திரன் உட்கார வைத்துள்ளார் .என்பதும் தெரியவந்தது

காவல்துறை அதிகாரிகளிடம் எதற்காக பத்திரிகையாளர்களிடம் விசாரணை என அனைத்து செய்தியாளர்களும் கேள்வி எழுப்பியும் காவல் துறையினர் பதில் அளிக்கவில்லை. இரண்டு மணி நேரம் கடந்த நிலையில் இரு பத்திரிகையாளர்களையும் காவல் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆர்.எஸ்.புரம் காவல்நிலைய ஆய்வாளர் கனகசபாபதி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் கிளம்பினார்.

பத்திரிகையாளர் இருவரும் என்ன தவறு செய்தார்கள் ? எதற்காக காவல் வாகனத்தில் ஏற்றி செல்கின்றீர்கள் என ஆய்வாளர் கனகசபாபதியிடம் கேட்ட போது அவர் உரிய பதில் அளிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் இருவரையும் நாங்களே காவல் நிலையம் அழைத்து வருகின்றோம் என்று மூத்த செய்தியாளர்கள் சொல்லியும் ஆய்வாளர் கனகசபாபதி அனுமதிக்க மறுத்து விட்டார் .காவல் வாகனத்தில் இருவரையும் ஏற்றி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

எதற்காக இரு பத்திரிகையாளர்களை குற்றவாளிகள் போல கோவை மாநகர காவல் துறை நடத்துகின்றது என்று தெரியவில்லை. பத்திரிகையாளர் ஜெரால்ட், பாலாஜி ஆகியோரை கோவை மாநகர காவல்துறை தரக்குறைவாக நடத்தும் போக்கினை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டனம் தெரிவித்தது.

கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சிம்ப்லிசிட்டி நிறுவனம் செய்தி வெளியிட்டதில் மாறுபட்ட கருத்துகள் இருந்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்வதில் எந்த தவறுமில்லை.ஆனால், இரு பத்திரிகையாளர்களை எதற்காக விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர் என்பதை கூட சொல்லாமல் கோவை மாநகர காவல்துறை , இரு பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாக நடத்துவது மோசமான செயல் என்பதை சுட்டி காட்டுகிறார்கள் பத்திரிக்கையாளர்கள்

கோவை மாநகர காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையினை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மீண்டும் , மீண்டும் கண்டிப்பதுடன், கோவை மாநகர காவல் துறையின் இது போன்ற செயல்பாடுகள் ஊடகங்களுக்கு பாதுகாப்பற்ற , அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது என செய்தி பரவியதும்  இரண்டு மணி நேர விசாரணைக்கு பிறகு இரு பத்திரிக்கையாளரும் விடுதலை செய்யப்பட்டார்கள்

கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் காலத்தில் பத்திரிகையாளர்கள் உயிரை பணையம் வைத்து பணியாற்றி வரும் சூழலில் கோவை மாநகர காவல் துறை இத்தகைய செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top