இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21700 ஆக அதிகரிப்பு! மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் 14 பேர்பலி!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் 21 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதற்கிடையே, இந்தியாவின் பொருளாதாரநிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது  இந்த நிதி ஆண்டில் இந்தியப்பொருளாதாரம் ஒரு சதவீதத்திற்கும் கீழே போய்விடும் என்று புள்ளி விபரம் சொல்கிறது.மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த கொரோனா பாதிப்பை சரிசெய்ய  தெரியவில்லை என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன. ஆரம்பத்திலே கொரோனா பாதிப்புக்கு ஒரு மதச்சாயம் பூசியதால் மக்களுக்கு அரசு மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தி விட்டது.  

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 686 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1229 ஆக உள்ளது. கொரோனாவால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6427 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,649 ஆக இருந்தது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 779 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 6,427 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 

உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று ஒரே நாளில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் இன்று மேலும் 128 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,376 ஆக அதிகரித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top