மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் 33 சதவீதம் இயங்கலாம் – தமிழக அரசு

ஊரடங்கு முடியும் மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் மே 3-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் என்ன செய்வது என்று தொழிலதிபர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது

இந்தக்கூட்டத்தில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், முருகப்பா குழும தலைவர் வெள்ளையன், டிவிஎஸ்& சன்ஸ் தினேஷ், ராம்கோ சிமெண்ட்ஸ் வெங்கட்ராமராஜா, தோல் ஏற்றுமதி குழுமம் அஹுல் அகமது, இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஹரி தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

ஆலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டால் தொழிற்சாலைகளிலேயே ஒரு பகுதியில் தொழிலாளர்கள் தங்க இடம் ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும். யாரும் வெளியில் வர அனுமதி இல்லை, உள்ளுக்குள்ளேயே உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஏற்பாடு செய்யவேண்டும். அதிலும் சமூக விலகல் கட்டாயம் இருக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது

இந்த நிபந்தனைகள் ஏற்கப்படுமாயின் தொழிற்சாலைகள் சில இயங்க அனுமதிக்கப்படும் என தெரிகிறது. இதனிடையே அத்தியாவசிய தொழிற்சாலைகள் ஏற்கெனவே இயங்கி வருகின்றன. அவைகள் என்னென்ன தொழிற்சாலைகள் என்பது குறித்து அந்ததந்த மாவட்ட நிர்வாகங்கள் இடையே குழப்பம் நீடிப்பதால் அதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது:

1.சுத்திகரிப்பு ஆலைகள் , 2.பெரிய அளவிலான உருக்கு ஆலைகள், 3.பெரிய அளவிலான சிமெண்ட் ஆலைகள், 4. பெயிண்ட் தயாரிப்பு உள்ளிட்ட தொடர்ச்சியான செயல்முறை இரசாயன தொழில்கள்,5. உர ஆலைகள், 6.சர்க்கரை ஆலைகள்,7.கண்ணாடி ஆலைகள், 8. டயர் ஆலை, 9.காகித ஆலை,10 தொடர்ச்சியான செயல்முறை கொண்ட பெரிய கட்டுமானங்கள் உள்ளிட்டவை இயங்குவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்..100 நாள் வேலை திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் தனி மனித இடைவெளியுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. 

நீர்ப்பாசனம், அணைகள், சாலைகள், செங்கல் சூளை, குடிநீர் வினியோகம், தூய்மை பணிகள், மின்சார பணிகள்  ஆகியவற்றை  மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அனுமதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக ,மே 3 பிறகும் ஊரடங்கு பாதியாக தொடரும் என தெரிய வருகிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top