சென்னை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள் கொரோனாவால் பாதிப்பு; சிகிச்சைதீவிரம்!

சரியான பாதுகாப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்காததால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்த்த உயர் பட்ட படிப்பு டாக்டர்கள், நர்சுகள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளித்து கண்காணிக்கப் படுகிறார்கள்..

சென்னையில் கொரோனா தொற்றுவின் தாக்கம் தீவிரமாகி வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

அவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவ பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பாதுகாப்பு உடை, முகக்கவசம், கையுறை, போன்றவை உரிய முறையில் வழங்கப்படாததால் சரியான பாதுகாப்பின்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தமிழகத்தில் 3 மருத்துவர்கள் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  

இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 நர்சுகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்.எம்.சி.) உயர்பட்ட மேற்படிப்பு படிக்கக்கூடிய டாக்டர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவ விடுதியில் தங்கியுள்ள அவர்களை பரிசோதித்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படவில்லை உடனடியாக எங்களுக்கு அவைகள் வழங்கப்பட்டால்தான் மருத்துவம் பார்க்க இயலும் என்று இன்று ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் அறிவித்து இருந்தார்கள்.முதல்வர் தலையீட்டால் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என தகவல்கள் வருகின்றன.

மருத்துவர்களுக்கான பாதுகாப்பே மக்களுக்கான பாதுகாப்பு! குறைந்த பட்சம்  மருத்துவம் பார்க்கிற டாக்டர்களுக்கே பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்றால் மக்களுக்கு எப்படி இந்த கொரோனாவிலிருந்து அரசு பாதுகாப்பு அளிக்கும்?

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top