கொரோனா தடுப்பு மதிப்பாய்வு குழு ஒரு தலைப்பட்ச நடவடிக்கை; பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

“மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மதிப்பாய்வு செய்யும் மத்திய குழுவை (ஐ.எம்.சி.டி) அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது விரும்பத்தக்கதல்ல” மம்தா பானர்ஜி மோடிக்கு கடிதம்

மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் முக்கியமாக ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையை  மதிப்பாய்வு செய்யும் மத்திய குழுவை (ஐ.எம்.சி.டி) அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது

இப்படி மாநில அரசின் ஒப்புதல் இன்றி மத்திய குழுவை அனுப்புதல் ஒரு தலைப்பட்ச நடவடிக்கை; இது விரும்பத்தக்கது அல்ல என பிரதமர் மோடிக்கு மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசாங்கங்களும், மத்திய அரசும் இந்த பேரழிவை எதிர்த்து போராடிவருகின்றன.

ஆனால், இந்த பேரழிவில்கூட அரசியல் தொடர்கிறது. மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு அந்த மாநிலங்களின் ஒப்புதல் இன்றி மத்திய குழுவை (ஐ.எம்.சி.டி) அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழுக்கள் மாநிலங்களில் கொரோனாவின்  நிலைமைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு மீறல்கள் பற்றிய புகார்கள் குறித்து பதிவு செய்யும்

ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்துள்ளார். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி  

“கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக மத்திய அரசின் ஆதரவையும் பரிந்துரைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும், மேற்கு வங்காளம் உள்பட வேறு சில மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு எடுத்த முடிவு புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்திற்கு இரண்டு ஐ.எம்.சி.டி.க்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் மத்திய அரசின்  பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இடம்பெறுவார்கள். இந்த அணிகள் கொரோனாவுக்கு எதிரான மாநிலத்தின் நடவடிக்கை மற்றும் முக்கியமாக ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையை  மதிப்பாய்வு செய்யும்.பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இந்த குழு எப்படி செயல்படும் எப்படி அறிக்கை தயாரிக்கும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்  

இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், “இந்த அணிகள்  நிலைமையை உடனடியாக மதிப்பீடு செய்து, மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் மற்றும் அவர்களின் அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பும்” என்று கூறியுள்ளது

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, ஹவுரா, கிழக்கு மெடினிபூர், வடக்கு 24 பர்கானாக்கள், டார்ஜிலிங், கலிம்பொங் மற்றும் ஜல்பைகுரி ஆகிய இடங்களில் நிலைமை சரியாக இல்லை என்பது தெளிவாகிறது என்று அந்த கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதை மறுத்த மம்தா மாநிலத்தின் இந்த மாவட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படையை நான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் கேட்கிறேன். எந்தவொரு தெளிவான காரணமும் இல்லாமல் என்னால் மத்திய அரசு குழுவை மாநிலத்தில் அனுமதிக்க முடியாது. இதற்காக நான் வருத்தப்படுகிறேன், ஏனென்றால் இது மாநில அரசின் உரிமைக்கு எதிரானது என கூறி உள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

‘இதுபோன்ற ஒருதலைப்பட்ச நடவடிக்கை விரும்பத்தக்கது அல்ல.மேற்கு வங்காளத்திற்கு தங்கள் குழுக்களை அனுப்புவதில் மத்திய அரசு காட்டிய  செயல்பாட்டை நான் பாராட்டுகையில், இது முன்கூட்டியே தெரிவிக்கப்படாமல் செய்யப்பட்டது, எனவே இது நெறிமுறையை மீறுவதாகும். மாநில அரசுக்கு தளவாட பொருட்களை வழங்க, மத்திய குழுக்கள் மாநில அரசை முழு இருளில் வைத்திருக்க முயலும். மேலும் தளவாட ஆதரவுக்காக பி.எஸ்.எஃப், எஸ்.எஸ்.பி போன்ற மத்திய படைகளை அணுகி உள்ளன. மாநில அரசாங்கத்துடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் இது செயல்படும் என கூறி உள்ளார்.

தமிழகத்தில் இந்த குழு மதிப்பாய்வுக்கு வந்தால் எந்த, எந்த மாவட்டங்களை தேர்தெடுத்து வரும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.அப்படி மத்திய அரசு தேர்தெடுக்கும் மாவட்டங்களில் கண்டிப்பாக கோயம்புத்தூர் இருக்கும் என்பது அறிந்ததே!  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top