மக்கள் பசி, பட்டினி; இதயமில்லாத அரசு ஒன்றும் செய்யாமல் இருக்கிறது : ப.சிதம்பரம் ட்விட்

மொத்தம் 40 நாட்கள் ,21 நாள் அதற்குப்பிறகு 19 நாள் என ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு ஏழைகளுக்கு ஏதும் செய்யாமல் இருக்கிறது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கொரோனா இந்த காலக்கட்டத்திற்குள் கட்டுக்குள் வரவில்லை. இதனால் மேலும் 19 நாட்கள் அதாவது மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 21 நாட்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்கள் உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டும் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார். குறைந்தது 65 ஆயிரம் கோடி ரூபாயை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டு என ஆலோசனை வழங்கினார். ஆனால் மத்திய அரசு எதையும் கேட்கவில்லை.

இந்நிலையில் மேலும் 19 நாட்கள் என்பதால் மக்கள் உணவுக்காக வெளியே வருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய இதயமில்லை என்று மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கைகளில் பணம் இல்லாமல் இலவசமாகக் கிடைக்கும் சமைக்கப்பட்ட உணவுகளை வாங்குவதற்காக வரிசையில் மக்கள் நிற்கும் காட்சிகள் நாள்தோறும் அதிகரிப்பதைக் காண முடிகிறது. இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் நடக்கின்றன. இதயமற்ற ஒரு அரசுதான் இப்படி மக்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யாமல் அமைதியாக இருக்கும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ‘‘மாநில அளவில் இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தெரிவித்ததில் ஐஎம்சிஆர் அறிக்கைக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் வெளியிட்டுள்ள அறிக்கைக்கும் இடையில் குழப்பமும், முரண்பாடும் உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top