திருத்தப்பட்ட புதிய தரவுகள்;சீனாவைப் போல மற்ற நாடுகளும் திருத்தவேண்டும் உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படைந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா பாதிப்பை மிகக்கூர்மையாக கவனித்து வருகிறது.அது சீனாவில் யூகான் நகரத்தில் ஆரம்பித்த கொரோனா பாதித்த புள்ளி விபரத்திலிருந்து இன்று மேற்கு உலகு அடைந்து வரும் பாதிப்பின் புள்ளி விபரங்கள் வரை கவனித்து வந்ததில்,சீனாவின் ஆரம்பகாலகட்ட புள்ளி விபரங்கள்- சிலதரவுகள்   ஒத்துபோகாததால், உலக சுகாதார நிறுவனம் சீனாவிடம் மீண்டும் கொரோனா பாதிப்பின் புள்ளி விபரங்களை கேட்டது.   

சீனாவும் தற்போதைய அதாவது, திருத்திய புள்ளி விபரங்களை உலக சுகாதார நிறுவனத்திடம் ஒப்படைத்தது

சீனாவைப் போன்றே மற்ற நாடுகளும் கொரோனா பாதிப்பு குறித்த தரவுகளை திருத்த வேண்டியிருக்கும் என உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.மிகவும் கவனிக்கத்தக்கது

சீனாவின் யூகான் நகரை முதன் முதலில் தாக்கிய கொரோனா, இப்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவி 1.5 லட்சம் உயிர்களை பலி வாங்கி உள்ளது. சீனாவில் அதிகம் பாதிப்படைந்த யூகான் நகரில் கடைசி நிலவரப்படி, கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,579 ஆக இருந்தது. நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 3342 என்ற அளவில் இருந்தது. புதிய நோய்த்தொற்றும் வெகுவாக குறைந்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், யூகான் நகரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையில் நேற்று திருத்தம் செய்யப்பட்டது. 

யூகான் நகரில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த 2,579 என்ற உயிரிழப்பு எண்ணிக்கை 3,869 ஆக மாற்றம் செய்யப்பட்டது. இது 50 சதவீத உயர்வு ஆகும்.

ஊரடங்கு காலத்தின்போது மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தலின்போது இறந்தவர்களின் பெயர்கள் விடுபட்டதாகவும், அந்த வகையில் யூகான் நகரில் இறந்தவர்களின் பட்டியலில் மேலும் 1290 பேர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் மொத்தம் 4632 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு விஷயத்தில் சீனா உண்மையை தெரிவித்து உள்ளது  மற்ற நாடுகளுக்கு  பாடமாக அமையும்.  

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் தொழில்நுட்ப அமைப்பை சேர்ந்த  மரியா வான் கெர்கோவ் கூறுகையில், ‘கொரோனா பாதிப்பு குறித்த தரவுகளில் சீனா திருத்தம் செய்திருப்பது, யாருடைய பெயரும் விடுபடாமல் அனைத்தையும் ஆவணப்படுத்தும் முயற்சி. பாராட்டத்தக்கது. கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் அனைத்தையும் அடையாளம் காணும் பணி ஒரு சவாலாக உள்ளது. பல நாடுகள் சீனா போன்று இதே சூழ்நிலையில் இருக்கப் போகின்றன என நினைக்கிறேன். எனவே, உலக நாடுகள் கொரோனா பதிவுகளை மறுஆய்வு செய்து பார்க்க வேண்டும்’ என்றார்.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் மொத்தம் 82,692 கொரோனா பாதிப்புகளையும் மற்றும் 4,632 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது, இது யு.எஸ் மற்றும் ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளின் புள்ளிவிவரங்களை விட குறைவாகத்தான்  உள்ளது.

“கொரோனா-கோவிட்-19 லிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம், ஏனெனில் இது பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும், இது குறித்த துல்லியமான அறிக்கையை நாங்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியம்” என்று வான் கெர்கோவ் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறும் போது, ‘அனைத்து நாடுகளும் சீனாவை போன்றே செயல்படும். ஆனால், துல்லியமான புள்ளிவிவரங்களை சீக்கிரம் தயாரிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

வான் கெர்கோவ் கூறியது போல எல்லா புள்ளி விபரங்களையும் மீண்டும் சரிபார்க்க வேண்டும் கொரோனா -கோவிட் -19 இறப்புகளின் துல்லியமான எண்ணிக்கையைப் பெற நியூயார்க் நகரமும் போராடியது, ஏனெனில் அதிகமான மக்கள் வீட்டிலேயே இறக்கின்றனர், மேலும் சில கொரோனா வைரஸ் மரணங்கள், மாரடைப்பு மற்றும் பிற காரணங்களால் இருக்கலாம்.என எண்ணப்படுகிறது. நியூயார்க் நகரத்தில் இந்த வார தொடக்கத்தில், நகர அதிகாரிகள் “சாத்தியமான” கொரோனா -கோவிட் -19 இறப்புகளை எண்ணத் தொடங்குவதாகக் கூறினர், அவை “அறியப்பட்ட நேர்மறையான ஆய்வக சோதனை இல்லாதவர்கள்”, ஆனால் கோவிட் -19 காரணமாக இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

வியாழக்கிழமை நிலவரப்படி, நியூயார்க் நகர சுகாதார மற்றும் மனநல சுகாதாரத் துறை மார்ச் 11 முதல் 3,914 கோவிட் -19 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது, அவை முன்னர் தெரிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை  கணக்கில் கொள்ளவில்லை . நியூயார்க் நகரில் இதுவரை 7,563 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 இறப்புகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டது

சேவற்கொடியோன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top