இந்தியா அனுப்பிய மருந்துகள் அமெரிக்காவை அடைந்தன;தமிழ்நாட்டுக்கு வரவேண்டியவை இன்னும் வரவில்லை!

இந்தியா அனுப்பிய மருந்துகள் அமெரிக்காவை சென்று அடைந்தன.ஆனால், தமிழகத்திற்கு மத்திய அரசு அனுப்பவேண்டிய ராபிட் கிட் இன்னும் வந்தபாடில்லை

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அளிப்பதற்காக ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்துகளை அளிக்குமாறு இந்தியாவிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மோடியை மிரட்டி கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, இந்த மருந்து ஏற்றுமதிக்கான தடையை மோடி நீக்கினார்

அதன்படி, 35 லட்சத்து 82 ஆயிரம் ஹைட்ரோக்சி குளோரோகுயின் மாத்திரைகள், அவற்றை தயாரிப்பதற்கான 9 டன் மூலப்பொருட்கள் ஆகியவற்றை விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. அந்த விமானம், நேற்று முன்தினம் அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தை அடைந்தது.

இந்த தகவலை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித்சிங் சாந்து தெரிவித்தார்.அதே நேரத்தில், மக்களுக்கு பரிசோதனை செய்ய தமிழகம் ஆர்டர் செய்திருந்த ராபிட் கிட் என்னும் கருவியை இந்தியா தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறது.தமிழக மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய பரிசோதனை கருவியை எப்படி இந்தியா தடுத்து நிறுத்தும்? இதை மாநில அரசும் கேட்டவில்லை.அமெரிக்க மக்களை விட தமிழர்கள் என்ன குறைந்தவர்களா?எடப்பாடி இதை ஏன் மத்திய அரசிடம் கேட்க மறுக்கிறார்  என மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top