பொதுமக்களுக்கு நிவாரணத்தை நேரடியாக வழங்கக் கூடாது;தமிழகஅரசு அதிரடி;திமுக அனைத்துக்கட்சிக்கூட்டம் நடத்த முடிவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவகாரத்தில் பொதுமக்களுக்கு நிவாரணத்தை நேரடியாக வழங்கக்கூடாது என்று புதிய சட்டத்தை மாநில அரசு மத்திய அரசின் துணையோடு கொண்டுவந்திருக்கும் இந்நிலையில்  மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை சம்பந்தமாக ஆலோசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமிக்கு பல கேள்விகள்  அறிக்கை மூலம் கேட்கிறார்.முதல்வரால் எந்த பதிலையும் சரியாக சொல்லமுடியவில்லை

இந்நிலையில், இன்று தமிழக அரசு தன்னிச்சையாக தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு நிவாரணத்தை நேரடியாக வழங்கக்கூடாது, மீறி வழங்கினால் சட்ட நடவடிக்கை என அறிவித்ததுள்ளது.

இது மனிதாபிமானமற்ற செயல். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் தன்னார்வலர்கள் ஏழை, எளிய மக்களுக்கு ,புலம்பெயர்ந்து வேலைசெய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து இந்த ஊரடங்கின் பட்டினிச் சாவிலிருந்து நட்டு மக்களை காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் ,அனைத்துக் கட்சிக்கூட்டத்தை ஏப்15 அன்று கூட்டுவதாக திமுக அறிவித்துள்ளது.

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கொரோனா நோய்த் தொற்றில் மத்திய- மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து, திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப் 15 (புதன்கிழமை) அன்று காலை 10மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் “அனைத்துக் கட்சிக் கூட்டம்”நடைபெறும்”. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ரேபிட் டெஸ்ட் நடத்தி கொரோனா தொற்று நோயாளிகளை இனங்காண வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

ஆனால், ரேபிட் டெஸ்ட் கிட் வாங்க தமிழகம் நேரடியாக கொள்முதல் செய்ய முயல அதற்கு மத்திய அரசு தடை விதித்து, மத்திய அரசின் மூலமாகத்தான் கொள்முதல் நடக்கும் என தெரிவித்ததாக வந்த தகவலை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

மறுபுறம் தமிழக அரசு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு கேட்ட 11000 கோடி ரூபாயில் வெறும் 500 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழகம் இதுவரை தனது சொந்த நிதியாக ரூ.3000 கோடி வரை செலவு செய்துள்ளது. மத்திய அரசிடம் தமிழகத்துக்கான நிதியை கேட்டுபெற மாநில அரசுக்கு துணிவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் மாநில அரசு அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை முதல்வர் நிராகரித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக திமுக தலைவர் ஸ்டாலின் விடும் அறிக்கைக்கு சரியான பதிலை முதல்வரால் தரமுடியவில்லை  

இன்று தமிழக அரசு தன்னிச்சையாக தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு நிவாரணத்தை நேரடியாக வழங்கக்கூடாது, மீறி வழங்கினால் சட்ட நடவடிக்கை என அறிவித்ததுள்ளார்.

இதை திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள் விமர்த்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட நிலைகள் குறித்து ஆராயவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை திமுக கூட்ட உள்ளதாக தெரிகிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top