லண்டன் இஸ்கான் துறவிக்கு கொரோனா பாதிக்கப்பட்டது போல திருமலையில் வேத பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

லண்டனில் உள்ள ‘இஸ்கான்’ கிருஷ்ண பக்தி இயக்கம் இந்து அமைப்பு துறவி ஒருவர் இறந்த இறுதி சடங்கில் 1000 இஸ்கான் துறவிகள் கலந்து கொண்டார்கள். அவர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது அதில் ஐந்து பேர் இறந்து போனார்கள்.உலக அளவில் இந்த செய்தி மிகவும் பேசப்பட்ட செய்தியாக இருந்தாலும் இந்திய பத்திர்க்கைகள் பெரிய அளவில் இதை வெளியிடவில்லை  

இப்போது திருமலையில் உள்ள வேதபாட சாலையில் தங்கி படிக்கும் 470 மாணவர்களில், 5 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்தது.கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக  மாணவர்களை தனி விடுதிகளில் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் படிக்கும் வேதபாட சாலை மாணவர்கள் பலர் திருமலையிலேயே தங்கி விட்டனர். இவர்கள் அனைவரையும் அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆனால் அங்குள்ள வேத விற்பனர்கள் கொரோனா தம்மை ஒன்றும் செய்து என்றெண்ணி அங்கேயே மாணவர்களை தனிமனித இடைவெளியை கூட கடைபிடிக்காமல் வைக்கப்பட்டனர் சிலர் மட்டும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். தற்போது இந்த பாட சாலையில் 470 பேர் தங்கி உள்ளனர். இந்நிலையில், இந்த வேதபாட சாலையில் படிக்கும் மாணவர்களில் சிலர் மும்பையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளனர். இவர்கள் சில நாட்களுக்கு முன் திருமலைக்கு திரும்பி வந்து விட்டனர்.

ஆனால், நேற்று முன் தினம் திடீரென இவர்களில் 5 மாணவர்களுக்கு கரோனா அறிகுறி இருப்பதை அறிந்தனர். உடனடியாக இவர்கள் அனைவரும் திருப்பதியில் உள்ள சிம்ஸ் தேவஸ்தான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உடனடியாக 470 மாணவர்களையும் திருமலையில் உள்ள நந்தகம் பக்தர்கள் தங்கும் விடுதியில் நேற்று மதியம் அழைத்து வந்து தனிமைப்படுத்தினர்.

இது குறித்து திருமலை  திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி ரவியிடம் கேட்டதற்கு, ‘‘வேதபாட சாலையில் படிக்கும் மாணவர்கள் ஏற்கெனவே அரசு நிபந்தனைகளின்படி தனித்தனியாக தங்கி படித்து வந்தனர். இவர்களின் சொந்த ஊர் வெகு தூரம் என்பதாலும், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதாலும் இவர்கள் திருமலையிலேயே தங்கி உள்ளனர். தற்போது 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது  இதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தனித்தனியாக வேறொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்’’ என கூறினார்.

டெல்லி தப்லீக் ஜமாஅத் விஷயத்தை பெரிய அளவில் பரப்புரை செய்த மீடியாக்கள் இதை ஏன் பரப்புரை செய்ய மறுக்கிறது என ஜனநாயக வாதிகள் கேட்கிறார்கள்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top