ஊரடங்கை முழுமையாக திரும்பப்பெற வாய்ப்பில்லை! மீண்டும் மக்கள் பாதிப்பு அடைவார்களா?

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தனிமனித இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தியாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊரடங்களை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வழியாக இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த உரையாடலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.அதிமுக கட்சிக்கு சிறப்பு அனுமதி வழங்கி இருந்தார் மோடி.

இந்தக் கூட்டத்தில் நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவை முழுவதுமாக திரும்பப் பெற வாய்ப்பில்லை என பிரதமர் மோடி அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்தாக தகவல் வெளியானது.

அனைத்துக் கட்சி தலைவர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மாநில முதல்வர்கள், அதிகாரிகள், பொது அமைப்பினர் என பலரும் வலியுறுத்தியுள்ளனர். அனைத்துக் கட்சிகள் மட்டுமின்றி பெரும்பாலான பொதுமக்களும் இதையே விரும்புகின்றனர்.ஊரடங்கு நடவடிக்கையால் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்[ WHO அப்படி சொல்லவில்லை ]. இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு தந்துள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் எனது நன்றி. எனினும் இதுபற்றி மாநில முதல்வர்களுடன் பேசி இறுதி முடிவெடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 14 ந்தேதி முழுமையாக ஊரடங்கை திரும்ப பெற போவதில்லை என தெரிகிறது. இந்நிலையில், கடந்த முறை ஊரடங்கை திடீரென அறிவித்து ஏழை, எளிய மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது போல, இந்தமுறை அப்படி இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். எதிர்கட்சிகள் ஆளும் கட்சியான பாஜக வை சரியான முறையில் விமர்ச்சனம் செய்து  கொரோனா தடுப்பு விசயத்தில் சரியான நடவடிக்கையை எடுக்க வழிகாட்ட வேண்டும்.இதைதான் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் புரிந்துகொள்ளவேண்டும்.   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top