மருத்துவமனையை சுத்தமாக வைக்க சொன்ன அசாம் மாநில எம்எல்ஏ அமிமுல் இஸ்லாம் தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது!

அசாமில் கரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவமனைகள் சரியாக இல்லை என்று பேசியதற்காக  அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏ அமிமுல் இஸ்லாமை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அசாமில் கரோனா நோய்த்தொற்றுக்கான மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்படும் இடங்கள், தடுப்புக் காவல் மையங்கள் இவைகள் எல்லாம் மோசமாக உள்ளன.நோய் தொற்று அழிக்க பயன்படுத்தப்படும் கருவிகள் சரியான முறையில் வழங்கப்படவில்லை  என்று அமிமுல் இஸ்லாம் தொலைபேசியில் மற்றொருவருடன் பேசியுள்ளார்

அமிமுல் இஸ்லாம் தொலைபேசியில் மற்றொருவருடன் பேசியதை ஆளும் கட்சியை விமர்ச்சனம் செய்து இருப்பதாக ஆடியோ பதிவு எடுக்கப்பட்டு  சமூக வலைதளங்களில் பரவச்செய்தனர்.அந்த ஆடியோ வைரலானது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை நேற்று காலையில் கைது செய்தனர்.

கொரோனா தாக்குதல் வேகமாக இருக்கிறதால் நாம் அதை எதிர்கொள்ள ஆயத்தமாகவேண்டும் என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை.ஒரு எம்எல்ஏ மக்களின் நலன்கருதி பேசியதை தவறாக சித்தரிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல.ஆளும் பாஜக அரசு தன்னை சர்வாதிகாரியாக நினைத்து செயல்படுவதாக தெரிகிறது.

அசாமில் உள்ள பாஜக அரசு முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்ததாக திரு இஸ்லாம் குற்றம் சாட்டியிருந்தார். டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் ஒரு மசூதியில் கடந்த மாத மதசபையில் இருந்து திரும்பி வந்தவர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள மருத்துவ ஊழியர்கள் துன்புறுத்துவதாகவும், ஆரோக்கியமான நபர்களை நோய்வாய்ப்பட்ட மற்றும் கொரோனா வைரஸ் நோயாளிகளாக சித்தரிக்க ஊசி போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாமின் பாஜக அரசு அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏ அமிமுல் இஸ்லாமை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து இருப்பதாக தகவல் வருகிறது.  .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top