இந்திய இரயில்வே IRCTC இயக்கும் 3 ரெயில்களின் முன்பதிவு ஏப்ரல் 30-ந்தேதி வரை ரத்து!

இந்திய ரெயில்வேயில் IRCTC இயக்கும் மூன்று ரெயில்களின் முன்பதிவு ஏப்ரல் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு, முழுத்தொகையும் திரும்ப வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ரெயில்களில் பயணம் செய்வதற்கு 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யலாம். இந்தியாவில் கடந்த 25-ந்தேதியில் இருந்து வரும் 14-ந்தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களின் டிக்கெட்டுக்கள் முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது. அவர்களுக்கு முழுமையான தொகைகள் திரும்ப வழங்கப்படும் என ரெயில்வேத்துறை அறிவித்தது.

ஊரடங்கு உத்தரவு முடிவடைய இன்னும் ஏழு நாட்களே உள்ளன. இதனால் ஏப்ரல் 15-ந்தேதிக்குப்பின் ரெயில் சேவை தொடங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்ததுள்ளன.

ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 14-ந்தேதிக்குப்பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் சொந்த ஊர் திரும்ப தயராக இருக்கும் பொதுமக்கள் ரெயில் முன்பதிவுக்கு வாய்ப்பு இருக்கிறதா? என ஆராய்ந்தனர்.

அப்போது ஆன்லைனில் 15-ந்தேதியில் இருந்து முன்பதிவு செய்வதற்கான வாய்ப்புகளும், டிக்கெட்டுகளும் இருந்தன. இதனால் பொதுமக்கள் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய ஆரம்பித்தனர். இதற்கிடையே ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது.

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், இதுபோன்ற செய்தி வெளியானதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த 21 நாட்கள் மட்டுமே ரெயில்கள் இயக்கப்படவில்லை. 120 நாட்களுக்கு முன்னர் இருந்தே முன்பதிவு செய்யலாம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதனடிப்படையில்தான் முன்பதிவு செய்யப்படுகிறது என ரெயில்வேத்துறை விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் IRCTC சார்பில் மூன்று ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மூன்று ரெயில்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு முழுத்தொகையும் திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top