மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு  உள்ளது. 

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 868 ஆக இருந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரசால் 1018 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top