ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை என மத்திய அரசு சொல்வது உண்மையா?

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம் என பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவிய  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  இந்தியா ஆரம்பத்தில் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் சீரிசாக எடுக்காததால் கொரோனா அதிகமாக பரவ ஆரம்பித்தது . கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிறகு மத்திய அரசு தீவிரமுடன் மேற்கொண்டு வருகிறது

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது.  இந்த உத்தரவு கடந்த 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது.

பெரிய அளவில் பரிசோதனைகள் நடைபெறவில்லை ஆகையால், நோய்க்கிருமி பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

இந்தியாவில் கொரோனா பாதித்தோரில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன.  

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம் என பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. பல்வேறு நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எந்தெந்த மாநிலம் அப்படி சொன்னது என்று என்றோ ,மத்திய அரசு எந்த மாநிலத்திடம் எப்போது கேட்டது என்றோ எந்த தகவலும் இல்லை மத்திய அரசு பரிசீலனை செய்துவருவதாக மட்டும் கூறப்படுகிறது.உள்நாட்டு பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு போயிருப்பதாக எல்லா மாநிலமும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறது மற்றுமின்றி மத்திய அரசு பேரிடர் நிதியையும் பெரிதாக ஒதுக்கவில்லை.இந்நிலையில் அப்படி சொல்லிருக்க வாய்ப்பில்லை


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top