அத்துமீறும் போலீஸ்;மதுரையில் போலீசார் தாக்கியதில் இஸ்லாமிய முதியவர் உயிரிழப்பு?- பொதுமக்கள் போராட்டம்

எத்தனை முறை சொன்னாலும், உயர்நீதிமன்றமே கண்டித்தாலும், டிஜிபி அறிக்கை கொடுத்தாலும் நாங்கள் திருந்தமாட்டோம் என்று போலீஸ் பொதுமக்களிடம் அத்துமீறலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.இதற்கு தீர்வே கிடையாதா? குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது சமீபத்தில் போலீஸ் மிகவும் கடுமையாக நடந்து வருகிறது.இப்போது அடித்து கொள்கிற அளவிற்கு போய்விட்டது.

மதுரை கருப்பாயூரணியில் காவல்துறையினர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்  போலீசை கைது செய்யக்கோரி உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி  பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தவர் ராவுத்தர். இவர் நேற்று கறிக்கடை நடத்தியதாகவும், அதனால் அப்பகுதிக்கு வந்த மூன்று காவலர்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராவுத்தர் இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். போலீசார் தாக்கியதே அவர் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் மற்றும் கருப்பாயூரணி பொதுமக்கள் அவரது உடலை சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தவவறிலந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்ல சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

எல்லா வகை அடிப்படைத் தேவைக்குரிய கடைகளையும் திறக்க அரசு சொல்லி விட்டு தனிமனித இடைவெளியை பின்பற்றாத  கறிக்கடைகளை மட்டும் மூடச் சொன்னது ,பிறகு எல்லா கறிகடையையும் மூடச்சொல்கிறது இது இஸ்லாமியர்களை குறிவைத்து அவர்களது பொருளாதாரத்தை சிதைக்கும் செயல்.இந்து ஆன்மீக கோவில்களில் யாகம் நடத்த அனுமதியை அளித்துவிட்டு தென்காசியில் பள்ளிவாசலுக்கு தொழுவதற்கு சென்ற இஸ்லாமியர்களை காவல்துறை தடி கொண்டு தாக்கி அடித்திருக்கிறது. இஸ்லாமிய வெறுப்பரசியலின் ஒரு பகுதியாகதான்  இதைப் பார்க்க வேண்டியுள்ளது.காவல்துறையினருக்கு பொதுமக்களை புரிந்து கொள்வதற்கும் குறிப்பாக இஸ்லாமியர்களை புரிந்துகொள்வதற்கும் பயிற்சி அளிக்கவேண்டும். காவல்துறையினர் சமூகத்தின் பொதுபுத்தியில் இயங்கினால் குற்றம் தான் அதிகரிக்கும்.    


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top