கொரோனா வைரஸ்ஸை கொல்ல ‘இவர்மெக்டின்’ புதிய மருந்து: விஞ்ஞானிகள் தகவல்

ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வைரஸ்களுக்கான தடுப்பு மருந்து குறித்து ஒரு ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான இவர்மெக்டின், கொரோனா வைரஸை 48 மணி நேரத்தில் கொல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எச்ஐவி, டெங்கு, இன்ப்ளுயென்சா மற்றும் ஜிகா வைரஸ்களையும் இந்த மருந்து கொல்லும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சி குழுவின் தலைவர் கைலி வாக்ஸ்டாப் கூறும்போது, “ஆய்வகத்தில் நுண்ணுயிரியைக் கொண்டு ஆய்வு செய்தபோது, ஒரு முறை ‘இவர்மெக்டின்’ மருந்தை கொடுத்தால் கூட, 48 மணி நேரத் தில் அனைத்து வைரல் ஆர்என்ஏவும் அழிந்துவிடுவது தெரிய வந்துள்ளது. இனிமேல் தான் மனிதர்களுக்கு வழங்கி சோதனையில் ஈடுபட உள்ளோம்” என்று தெரிவித்து உள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top