பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தக் கூடாது- மதுரை காவல் ஆணையர் அறிவுரை

இந்த மோசமான காலக்கட்டத்திலும் போலீஸ் தனது அதிகாரத்தை எளிய பொதுமக்களிடம் காண்பிப்பது தொடர்ந்து வருகிறது. இந்த நேரம் நோய் தொற்று நேரம். இது சட்ட ஒழுங்கு பிரச்சனை அல்ல! இந்த நேரத்தில் மக்களை தாக்ககூடாது என்கிற விஷயம் கூட போலீசுக்கு தெரியவில்லை.அவர்கள் விதியை மீறுபவர்களை குற்றவாளிகளாகவும்,தண்டனைக்கு தகுதியானவர் என்றும் பார்க்கிறார்கள்.

உயர்நீதிமன்றம் மக்களை தாக்ககூடாது என்று சொல்லிவிட்டது.டிஜிபி திரிபாதி அவர்கள் போலீஸ் கையில் கம்போடு-லத்தியோடு தெருவில் நிற்ககூடாது என்றும் சொல்லியாகி விட்டது.ஆனாலும் மக்களை அடிப்பதும்,துன்புறுத்துவதும் தொடருகிறது .

இந்நிலையில்,ஊரடங்கு அமல்படுத்தும் பணியை கண்காணிப்பது தொடர்பாக மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு தலா ஒரு எஸ்.ஐ. நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊரடங்கு பணி தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் கனிவுடன் பேசவேண்டும். பொதுமக்கள் மீது தடியடி நடத்தக் கூடாது. வாக்குவாதம் செய்யும் பொதுமக்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து எச்சரித்து அனுப்புங்கள்.

மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க் போன்றவை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திறந்திருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அவசர உதவி தேவைப்படு வோருக்கு உடனடியாக உதவ வேண்டும

போலீஸார் ரோந்து செல்லும்போது, உணவு கிடைக்காமல் சிரமப்படுவோர், மருத்துவ உதவி தேவைப்படுவோர் பற்றி தெரியவந்தால் நகர் நுண்ணறிவு பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும். வார்டுகளில் தங்களுடன் பணிபுரிய விரும்பும் தன்னார்வலர்கள் பெயர் பட்டியலை சேகரித்து, நுண்ணறிவு பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், வங்கி பணியாளர்கள், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினரை தன்னார்வலர்களாக தேர்வு செய்து பொதுமக்களுக்கு உதவ பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆணையர் தெரிவித்துள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top