கொரோனா தொற்று; ட்விட்டரில் வாசகரின் முறையான கேள்விக்கு பீலா ராஜேஷ் முரணான பதில்!

தமிழக அரசு எண்ணிக்கையில் தவறு செய்கிறதா? அல்லது வேறு இடத்தில் தோற்கிறோமா?

கொரோனா தொற்று பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.ஊரடங்கு ஒருவகையில் நமக்கு கை கொடுப்பதால் சமூகத் தொற்று இன்னும் ஏற்படவில்லை.என சொல்லப்பட்டாலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை நம்மை பயம் கொள்ளவைக்கிறது

அரசு நம்மிடம் உண்மையான எண்ணிக்கையை சொல்கிறதா என்கிற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுகிறது.மற்றும் தொடர்ந்து அரசு சொல்லும் காரணங்கள் நம்பிக்கைக்கு அப்பால் இருக்கிறது. இன்று சொன்ன ஒன்றை நாளை மறுத்து சொல்கிறது அல்லது அதற்கு சம்மதம் இல்லாததை சொல்கிறது.

சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் அவர்களிடம் ஒரு வாசகர் ட்விட்டரில் கேட்ட கேள்வியும் அதற்கு அவர்கள் சொன்ன பதிலும் நமக்கு சந்தேகத்தை வரவைக்கிறது.

அதன்படி இன்று (ஏப்ரல் 5) பீலா ராஜேஷின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ஒருவர், “டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு நபர் திரு.வி.க நகரில் பிடிபட்டதாக சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸப்பிலும் ஒரு செய்தி பரவி வருகிறது. 1103 பெரும் கண்டறியப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சொன்னீர்களே? பிறகு இது என்ன? பொய் சொன்னீர்களா? அல்லது இது வதந்தியா? என்னிடம்  ஸ்க்ரீன் ஷாட் உள்ளது. உங்களால் தெளிவுபடுத்த முடியுமா?

நான் உங்கள் தெளிவான பதிலுக்காகக் காத்திருக்கிறேன். வதந்திகளும், மத வெறுப்பும் பரவிக் கொண்டிருக்கிறது. உங்கள் மவுனம் அதை மேலும் தீவிரமாக்குவதாக உள்ளது. எனவே தயவுசெய்து இந்த சம்பவத்தைப் பற்றி தெளிவுபடுத்துங்கள். எண்ணிக்கையில் தவறு செய்கிறோமா அல்லது வேறு இடத்தில் தோற்கிறோமா? உங்கள் தகவலுக்கு” என்று கேள்வி எழுப்பினார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக பீலா ராஜேஷ், ”நல்லிணக்கத்துக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் பல துறைகளும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். தொடர்புகளைக் கண்டுபிடிக்கும்போது எண்ணிக்கையும் கூடுகிறது. கோவிட் 19 அச்சுறுத்தலுக்கு எதிரான யுத்தம் இது” என்று பதிலளித்துள்ளார்.

இந்த பதில் மேலும் பல சந்தேகங்களை தமிழக அரசு மீது ஏற்படுத்துகிறது. திடீரென சுகாதாரத்துறை அமைச்சர் காணமல் போகிறார். பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை.

முதல்வர் எடப்பாடியுடன் பிரதமர் தொலைபேசியில் பேசுகிறார், பின்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  கவர்னரை நேரில் சந்திக்கிறார்,தொடர்ந்து தினமும் பத்திரிக்கையாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சர் விஜய பாஸ்கர் காணாமல் போகிறார். பின்பு, சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தினமும் பேட்டி கொடுக்கிறார் அதன்பிறகு தப்லீக் ஜமாஅத் பற்றி தினசரி பேசுகிறார். ஒருநாள் சொல்கிற தகவல்கள் மறுநாள் சொல்கிற தகவல்களோடு ஒத்துப்போகிறதில்லை.எல்லாப் பத்திரிக்கைகளும் இஸ்லாமியர்களைப் பற்றிதான் எழுதுகிறது.இதில் யாரும் விதிவிலக்கல்ல.

இந்நிலையில் ட்விட்டரில் கேட்கப்பட்ட கேள்வி எல்லோர் மனதிலும் உள்ளது. சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் அவர்களின் பதில் பொருத்தமாக இல்லை.கேள்வி கேள்வியாகவே இருக்கிறது பீலா ராஜேஷ் அவர்களே!   

.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top