குறைந்த அளவில் டெஸ்ட்; தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்வு

இந்தியா முழுவதும் குறைந்த அளவு பரிசோதனை நடைபெறுவதால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டு இருக்கிறது

மத்தியில் ஆளும் பாஜக அரசு  இதை எப்படி கையாளுவது என்று தெரியாததால் மக்களை  விளக்கேற்ற சொல்லியும்,இஸ்லாமியர்கள் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்கிறது.மத்தியஅரசின் யோசனையை அப்படியே தமிழகஅரசும் கேட்பதால்  தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 571 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் விவரம் மாவட்டம் வாரியாக தெரிய வந்துள்ளது

ஏப்ரல் 3-ந்தேதி தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக இருந்தது, 4-ந்தேதி 74 அதிகரித்து 485 ஆக அதிகரித்தது. இன்று 85 அதிகரித்து 571 ஆக உயர்ந்துள்ளது.

.தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-

1. சென்னை – 95

2. கோவை – 58

3. திண்டுக்கல் – 45

4. திருநெல்வேலி – 38

5. ஈரோடு – 32

6. நாமக்கல் – 25

7. ராணிபேட்டை – 25

8. தேனி – 23

9. கரூர் – 23

10. செங்கல்பட்டு – 22

11. மதுரை – 19

12. திருச்சி – 17

13. விழுப்புரம் 15

14. திருவாரூர் – 12

15. சேலம் – 12

16. திருவள்ளுர் – 12

17. விருதுநகர் – 11

18. தூத்துக்குடி – 11

19. நாகப்பட்டினம் – 11

20. திருப்பத்தூர் – 10

21. கடலூர் – 10

22. திருவண்ணாமலை – 08

23. கன்னியாகுமரி – 06

24. சிவகங்கை – 05

25. வேலூர் – 05

26. தஞ்சாவூர் – 05

27. காஞ்சிபுரம் – 04

28. நீலகிரி – 04

29. திருப்பூர் – 03

30. ராமநாதபுரம் – 02

31. கள்ளக்குறிச்சி – 02

32. பெரம்பலூர் – 01


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top