பிரான்சில் பாதுகாப்பு கவசம் இன்றி கொரோனா சிகிச்சைக்கு அனுப்புவதை கண்டித்து செவிலியர்கள் நிர்வாணப்போராட்டம்

பிரான்சில் கொரோனா சிகிச்சைக்கு எங்களை எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி அனுப்புகிறார்கள்.இதனால் எங்களுக்கும் நோய் தொற்று பரவும்  என செவிலியர்கள்,மருத்துவர்கள்  நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு போராடி வரும் நிலையில், பிரான்ஸ் செவிலியர்கள் சிலர் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு, கொரோனாவை எதிர்கொள்ள அரசு எங்களை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி அனுப்புகிறது என்ற குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று, தற்போது நாட்டில் 82,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,507 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காக அங்கிருக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் போராடி வருகின்றனர்.இந்நிலையில், இந்த வாரத்தின் துவக்கத்தில், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் துவங்கியது. அதாவது, செவிலியர்கள் பலர் அரசாங்கத்திற்கு எதிராக நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தொற்றுநோயை எதிர்கொள்ள எங்களை எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி [நிர்வாணமாக ]அனுப்புகிறார்கள் என்று குறிப்பிட்டு, #Poilcontrelecovid (கொரோனாவுக்கு எதிரா நிர்வாணமாக) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, அமைதியான ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வயதினரின் மருத்துவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

 இது குறித்து பிரான்சின்  செவிலியர் ஒருவர் கூறுகையில், அரசாங்கம் அனைவருக்கும், எங்கள் நோயாளிகளுக்கும், நமக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.இதன் காரணமாகவே, இந்த தொற்றுநோயை எதிர்கொள்ள அரசாங்கம் எங்களை பாதுகாப்பில்லாமல் அனுப்புவதால் நிர்வாணமாக இருக்க இந்த பிரச்சாரத்தின் மூலம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், எல்லோரும் பயப்படுகிறார்கள், ஏனெனில் நோயாளிகளை பார்க்கிறோம், அதன் பின் வீட்டிற்கு செல்கிறோம். சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பார்ப்பதால், நாமே அந்த நோயை வீட்டிற்கு கொண்டு வர முடியும் என்று நினைக்கின்றனர்.

நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சையளிப்பதற்கும், எங்களுக்கும் எங்கள் நோயாளிகளுக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்தாமல் இருப்பதற்கும், எங்களிடம் இல்லாத பாதுகாப்பு உபகரணங்கள் தேவை. உள்ளூர் மருத்துவ ஊழியர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ள முக மூடிகள் எல்லாம் பழைய முகமூடிகள். 15 முதல் 20 ஆண்டுகளாக நம் நாட்டின் சுகாதார துறை மோசமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top