மும்பை விமான நிலையத்தில் பணியாற்றிய 11 துணை ராணுவ வீரர்களுக்கு கொரோனா!

மும்பை விமான நிலையத்தில் பணியாற்றிய 11 துணை ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை அருகே உள்ள நியூமும்பையில் கார்க்கர் என்ற இடத்தில் மத்திய துணை ராணுவமான தொழில் பாதுகாப்புபடை பிரிவு செயல்பட்டு வருகிறது. மும்பை விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு இங்கிருந்து வீரர்கள் அனுப்பப்படுவது வழக்கம். இவ்வாறு அனுப்பப்பட்ட சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. எனவே கொரோனா தாக்குதல் இருக்கலாம் என கருதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 5 பேருக்கு கொரோனா தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த படை பிரிவில் உள்ள 146 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மேலும் 6 பேருக்கு கொரோனா தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் முகாமில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top