தொடரும் கொரோனா ஆபத்து; இம்யூனோகுளோபுலின்ஸ் டெஸ்ட் எடுக்க இப்போதுதான் ஐசிஎம்ஆர் பரிந்துரை!

கொரோனா தொற்று அதிகமாக பரவும் மாநிலங்களில்  இம்யூனோகுளோபுலின்ஸ் ஆன்ட்டிபாடி டெஸ்ட்களை நடத்த ICMR பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில்  கொரோனா வைரஸ் எனும் கோவிட்-19 வைரஸின் பரவல் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 336 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 62 பேர் கொரோனா வைரஸுக்குப் பலியாகியுள்ளனர். 162 நோயாளிகள் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுதும் இதுவரை 66,000 சாம்பிள்கள் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளன. இதில் மீண்டும் சோதிக்கப்பட்ட சாம்பிகள்களும் அடங்கும். மகாராஷ்ட்ராவில் அதிகபட்சமாக 16 பேர் இறந்துள்ளனர். குஜராத்தில் 8, தெலங்கானாவில் 7, மத்திய பிரதேசத்தில் 6, பஞ்சாபில் 5, டெல்லியில் 4, கர்நாடகா, மேற்கு வங்கத்தில் முறையே 3 பேர், ஜம்மு காஷ்மீர், உ.பி. , கேரளா ஆகிய மாநிலங்களில் தலா 2 பேர் இறந்துள்ளனர்.

“இந்தியா தனது முன் கூட்டிய நடவடிக்கையை எடுத்திருந்தால்  கொரோனா தொற்று எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.பாஜக ஆளும் மாநிலங்களில் சமூகத்தின் நலம் கருதி ஏற்படுத்தி இருக்கும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதில்லை.இது பெரும் பின்னடைவுக்கு காரணம்.மற்றும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் எடுக்காமல் முன்னேற்பாடு இன்றி ஊரடங்கை அறிவித்து பேராபத்தை விளைவித்தது .ஆனால், மத்திய சுகாதார அமைச்சக இணைச் செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் வழிபாட்டுக் கூட்டத்துடன் கொரோனா தொற்றை தொடர்பு படுத்தி பேசிவருகிறார்.இது மிகவும் கண்டிக்கத்தக்கது.ஒரு மதத்துடன் இந்த கொடிய பேரிடரை தொடர்புபடுத்தி பேசுவது சட்டப்படி குற்றம்.  

கொரோனா தொற்று அதிகமாக பரவும் இடங்களில்-மாநிலங்களில்  இம்யூனோகுளோபுலின்ஸ் என்று அழைக்கப்படும் ஆன்ட்டிபாடி டெஸ்ட்களை நடத்த இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. ஆன்ட்டி பாடிஸ் அல்லது இம்யூனோகுளோபுலின்கள் என்பது Y வடிவ புரோட்டீன்கள் ஆகும். இது வைரஸ் அல்லது பாக்டீரியாவின் மேற்பரப்பில் ஒட்டும் தன்மை கொண்டது. இது ரத்தம் அல்லது உடலின் பிற திரவங்களில் உள்ளது. இதுதான் வெளியிலிருந்து வரும் வஸ்த்துக்களைத் தடுக்கும் உடலின் எதிர்ப்பாற்றல் சக்தியாகும்.

இந்த டெஸ்ட்டை நடத்ததான் இப்போது  ICMR பரிந்துரை செய்துள்ளது.

அதிக தொற்றுக்கு காரணம் உலக சுகாதார நிறுவனம் சொன்ன டெஸ்ட், டெஸ்ட் ,டெஸ்ட் என்ற மூன்று முறையான டெஸ்ட்டை முதலிலே எடுத்திருப்போம் என்றால்,நிறைய பாசிடிவ் கேஸ்களை தவிர்த்து இருக்கலாம். இம்யூனோகுளோபுலின்ஸ் பரிசோதனையையே இப்போதுதான் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள், இந்த பரிசோதனையை செய்ய இப்போதுதான் ICMR பரிந்துரை செய்துள்ளது.இப்படி இருக்கையில் ஒட்டுமொத்த கொரோனா தொற்றுக்கு காரணம் ஒரு மதத்தை சேர்ந்தவர்கள்தான் என்று மத்திய சுகாதார அமைச்சக இணைச் செயலர் லாவ் அகர்வால் பேட்டி கொடுப்பது கண்டிக்கத்தக்கது. எல்லாவற்றையும் மதமாக்கி பாஜக அரசு மக்களை திசை திருப்பி தனது கையாலாகாத தனத்தை மறைத்துக்கொள்கிறது.

.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top