மோடி பேச்சு விமர்ச்சனம் ; மாநிலங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

பிரதமர் மோடியின் பேச்சை விமர்ச்சனத்திலிருந்து காக்க உள்துறை அமைச்சகம் கொரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முதல் கட்டமாக 11 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் கொரோனா வைரசால் கடும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள் . தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு  உள்ளது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு தங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இன்று காலை பிரதமர் மோடி அவர்கள் நிதி ஒதுக்கீடு பற்றி அறிவிப்பு வெளியிடுவார் என நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது.மோடியின் அறிவிப்பு ஏமாற்றம் தருவதாக இருந்தது

மோடி கொரோனாவாவை விரட்ட மருத்துவ பணிகளுக்கும் மற்ற பேரிடர் நிவாரனப் பணிக்கும் நிதியை ஒதுக்காமல் எல்லோரும் ஞாயிறுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு டார்ச் அடிங்கள் கொரோனாவை விரட்டும் மகா சக்தி அதுதான் என்று சொன்னதும்.நாட்டு மக்களுக்கு பகீர் என்று இருந்தது.

எந்த மாதிரி துன்பத்தை  நாம் எதிர்கொண்டு இருக்கிறோம்,வளர்ந்த நாடுகளே இந்த கொரோனா துன்பத்திலிருந்து விடுபட தெரியாமல் இருந்து வருகிற நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இவர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று உலக நாடுகள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கையில் பிரதமர் மோடி டார்ச் அடித்து கொரோனாவை விரட்ட சொன்னது கோமாளித்தனமாக இருந்தது.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு வருகிறதால் உடனே உள்துறை அமைச்சகம் ஒரு முடிவு எடுத்தது.

கொரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முதல் கட்டமாக 11 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க உள்துறை அமைச்சகம் இன்று முன்வந்தது.

பிரதமர் மோடியின் பேச்சை விமர்ச்சனத்திலிருந்து காக்க உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவு யானை பசிக்கு சோளப்பொரி போடுவதுபோல என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top