கொரோனாவை கட்டுப்படுத்த டார்ச் அடியுங்கள் என பிரதமர் மோடி அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது;திருமாவளவன்

கொரோனாவை கட்டுப்படுத்த மின் விளக்கை அணைத்து , டார்ச் அடியுங்கள் என பிரதமர் மோடி அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை குறிக்கும் வகையில், வரும்  5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும். 9 நிமிடங்களுக்கு வீட்டு வாசல் அல்லது பால்கனியில் அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும். அல்லது செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும். விளக்கேற்றும்போது சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், ஒன்று கூடி விளக்கு ஏற்றக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட செய்தி குறித்து நாடே கவலையாக உள்ளது. நாளுக்கு நாள் மனிதர்கள் செத்துக்கொண்டிருக்கையில் டார்ச் அடிங்கள் ,விளக்கேற்றுங்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தம்.இது குறித்து  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

மின் விளக்கை அணைத்து , டார்ச் அடியுங்கள் என அறிவித்து மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார் பிரதமர் மோடி. 21 நாள் ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என காத்திருக்கையில் பிரதமர் மோடி விளக்கேற்ற சொவது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் தான் –இனி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top