சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

சமூக விலகளை கடைப்பிடிக்காத உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே, 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அந்த மாநில முதல்வர் ஆதித்தியா நாத் யோகி அவர்களே கடைப்பிடிக்காமல் மத ரீதியான விழாக்களில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.  

இந்நிலையில் சமூகவிலகளை கடைப்பிடிக்காத மாநிலமான உத்திர பிரதேசத்தில் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கவுதம் புத்தா நகரில் இதுவரை 38 கொரோனா தொற்று நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் இதுதான் அதிக பாதிப்பு எண்ணிக்கை கொண்டது.

இந்த 38 நோயாளிகளில் 24 நோயாளிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனியார் நிறுவனம் ஒன்று காரணமாகியுள்ளது, இந்த நிறுவனத்தின் மீது மக்கள் வாழ்க்கையை, உயிரை அச்சுறுத்துவதாக வழக்கு தொடரப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

626 சாம்பிள்கள் இங்கு சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, 1852 பேர் கண்காணிப்பில் உள்ளனர், நொய்டாவில் பல்வேறு இடங்களில் 291 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கவுதம புத்தர் நகரிலிருந்து 6 நோயாளிகள் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 32 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு உ. பி முதல்வர் ஆதித்தியநாத் யோகி  பங்கெடுத்த ராமநவமி விழாவில் கலந்துகொண்டவர்களையும் பரிசோதனை செய்ய மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

மீரட்: இது ஒரு மேற்கு உத்தரப்பிரதேச மாவட்டமாகும், இதுவும் உ.பி.யின் 2வது ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. இங்கு 100 பேருக்கு மேல் கொரோனாவுக்காக அனுமதிக்கப்பட்டதில் 19 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்களன்று சோதனை முடிவுகள் வெளியான 17 பேர்களில் 6 பேர்களுக்கு உறுதியானது. இந்த 6 பேர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top