வேளச்சேரி பீனிக்ஸ்மால் பணியாளருக்கு கொரோனா தொற்று!அங்குசென்றவர்கள் கவனம்;சென்னை மாநகராட்சி

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு சென்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் கேரளா அரசு செய்ததைப்போல அவருடன் தொடர்புடைய அனைவரையும் தனிமைப்படுத்தி தொடர் சங்கிலியை கண்காணிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

அந்த வகையில் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள லைஃப்ஸ்டைல் கடையில் வேலைப் பார்க்கும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு வேலை செய்யும் மற்றவர்களை அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் மிகப்பெரிய மால் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பீனிக்ஸ் மால் சென்று வருவார்கள். வந்து செல்பவர்களுக்கான பதி்வேடு ஏதும் கிடையாது. சிசிடிவி பதிவை வைத்து அடையாளம் காண்பது எளிதான காரியம் அல்ல. இதனால் மாநகராட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ‘‘மார்ச் 10-ம் தேதியில் இருந்து மார்ச் 17-ம் தேதி வரையில் பீனிக்ஸ் மாலிற்கு (முக்கியமாக லைப்ஸ்டைலிற்கு) சென்று வந்தவர்கள் மற்றும் மாலில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் மிகக்கவனமாக இருக்கும்படியும், கொரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவ உதவிக்கு கீழு்ள்ள கட்டுப்பாட்டு அறை எண்ணை அழைக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ அறிவித்துள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களையும் கொடுத்துள்ளது.

உதவி எண்கள்: -044-2538 4520044- 4612 2300

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top