ஈஷா மைய்யம் சேர்க்கப்படாமல் தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு; எண்ணிக்கை 309 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 75 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் ஈஷா யோகா மையத்தில் உள்ளவர்கள் சேர்க்கப்படவில்லை

ஈஷா யோகா மைய்யம் நடத்திய மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு அங்கேயே தங்கியிருக்கும் வெளி நாட்டினர் மீதும் மற்றும் பலர் மீதும் கொரோனா பரிசோதனை செய்ய பத்திரிகைகள் வலியுறுத்தினர்.

கடந்த செவ்வாயன்று, சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ், பிப்ரவரி 15 க்குப் பிறகு மாநிலத்திற்கு வந்த வெளிநாட்டவர்கள் மற்றும் இந்தியர்கள் பற்றிய விவரங்களை அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், இஷா யோகாவில் உள்ள வெளிநாட்டவர்களும் சரிபார்ப்பு பட்டியலில் உள்ளனர் என்றும் கூறினார்.

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தின்படி,டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு வந்தது போல  அரசாங்க அறிவிப்புக்கு முன்பே இங்கும் வெளிநாட்டினர் வந்திருந்தனர்.

அவர்கள் ஈஷா யோகா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் சுகாதாரத் துறை சோதனை நடத்தியது. அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களால் தான் பரப்பப்படுகிறது என்கிற செய்தியை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் திட்டமிட்டு பரப்பினர்.

மிகப்பெரிய பேரிடரை சந்தித்துக்கொண்டு இருக்கிற இச்சூழ்நிலையில் குறைந்தபட்ச மனிதமாண்பு கூட இல்லாமல் இப்படி பரப்புரை செய்வது இந்த கொரோன வைரஸ்ஸை விட கொடுமையானது.

இந்நிலையில் ஈஷா யோகா மைய்யத்தை சோதனையிட வேண்டும் என்று கேட்கப்பட்ட உடன்   “இதுவரை இங்கு தங்கியுள்ள ஒருவருக்கு கூட கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக, ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஈஷா யோகா மைய்யம் கேட்டுக்கொண்டது.

இது குறித்து தமிழக முதல்வர் பேசும் போதும் ஈஷா மைய்யத்தில் உள்ளவர்களுக்கும் அறிகுறி இருந்தால் சோதனை செய்யப்படும் என்று கூறியிருந்தார்

நிலைமை கைமீறி போகிறது என்று தெரிந்ததும் , இப்பொது ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜாக்கி வாசுதேவ் “தமிழ் மக்களை கெஞ்சி கேட்கிறேன் குறிப்பிட்ட மதத்தினரால் கொரோனா பரவுகிறது என்று கூறாதீர்கள்” என்று கை எடுத்து கும்பிட்டு வேண்டுகோள் வைத்திருக்கிறார்

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ளதை போலவே  தமிழகத்திலும்  கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஈஷா யோகா மையத்தில் மார்ச் 28 ஆம் தேதி மருத்துவ பரிசோதனை நடைபெற்றதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், வெளிநாட்டினருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் ஸ்கிரின் டெஸ்ட் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை விவரங்கள் கிடைக்கவில்லை.அவைகள் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கின்றன என்று செய்திகள் வருகின்றது.[கொரோனா தொற்று இருப்பதாக] அவைகள் வெளிவந்தால் தமிழகத்தில் இன்னும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top