மனிதமாண்போடு சமூகவிலகலை கடைபிடித்த நெல்லை மாவட்ட ரேஷன் கடை;போலீஸ்காரர்கள் கற்றுக்கொள்ள ஒரு பாடம்!

கொரோனா வைரஸ் தொற்று என்பது இந்த சமூகம் திடீரென எதிர்கொள்ளும் ஒரு பேரிடர்.இந்த மாதிரி பேரிடரை நாம் எதிர்கொண்டதில்லை.ஆகையால், இதை கையாளுவதில் பல சிக்கல்கள் வருவதுண்டு. ஆனாலும் அதை எப்படி மனித மாண்போடு கையாளுகிறோம் என்பதுதான் முக்கியம்.இது போன்ற பேரிடர்களில் பணக்காரர்களை ஒருவிதமாகவும் ஏழை, எளிய மக்களை வேறுவிதமாகவும் கையாளுவது தவறு.

உதாரணமாக, இந்த பேரிடர் காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.அரசு திடீரென எந்த முன்னேற்பாடும் இன்றி அறிவித்ததால் ஏழை, எளிய மக்கள் தினசரி பாடு பெரிய சிக்கலுக்குள்ளானது. அதாவது அரசு அறிவித்த சமூக விலகளை கடைப்பிடிக்க மக்கள் திண்டாடினார்கள்.

குடிக்க தண்ணீர் இன்றி வீட்டில் எப்படி இருக்கமுடியும்.தண்ணீர் கடை திறந்து இருக்கும் ஆனால், நீங்கள் தண்ணீர் வாங்க வெளியே வந்துதான் ஆகவேண்டும்.அப்படியான நிலையில்,போலீஸ் உங்களை வெளியே வந்ததற்கு தாக்கும்.போலீசுக்கு இது குறித்து எந்த பயிற்சியும் கொடுக்காமல் இருந்ததால் கீழ் நிலையிலிருந்து பெரிய அதிகாரிகள் வரை வெளியே வரும் பொதுமக்களை குற்றவாளியாக பார்த்தார்கள்

.ஆகையால், அடித்தார்கள், காய்கறி வண்டிகளை மறித்து, எல்லா காய்கறிகளையும் கீழே கொட்டினார்கள்.குறைந்தபட்ச மனிதாபிமானமும் இன்றி அவர்கள் நடந்து கொண்டது.நாம் எவ்வளவு தூரம் மனித மாண்புகள் அற்று இருக்கிறோம் என்பதை புரிய வைத்தது.சமூகவலைத்தளத்தில் காட்சிகளாக அவைகள் வந்ததால் போலீஸ் அதிகாரிகள் இனி கையில் லத்தியோடு இருக்கவேண்டாம் என்று அறிவித்தது அரசு.  

இந்தமாதிரி சூழலில் எப்படி மனித மாண்போடு நடந்து கொள்ளவேண்டும் என்று நடத்திக்காட்டியது  நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு ரேசன் கடை

போலீஸ்காரர்கள் பாடம் கற்றுக்கொள்ள ஒரு பெரிய உதாரணமாக இது அமையும் என்பதில் மாற்றுகருத்து இல்லை!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரத்தில் (டானா பகுதி) 27GC012PN எண் கொண்ட நியாயவிலைக் கடையில் சமூக விலகலைக் கடைபிடித்து தங்கள் பணியை செய்ததும், பொதுமக்களை மரியாதையாக நடத்தியதும் ஆச்சரியத்தை வரவைத்தது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 43 ஆயிரத்து 451 கார்டுகளுக்கும், தமிழக அரசு அறிவித்துள்ள 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் பணி தொடங்கியது.

இன்றிலிருந்து ஒவ்வொரு நியாய விலைகடைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற சமையல் உதவிப் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் வழங்கும் பணி மாவட்டத்திலுள்ள 789 நியாய விலைக் கடைகள் மூலம் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரத்தில் (டானா பகுதி) 27GC012PN எண் கொண்ட நியாவிலைக் கடையில் சமூக விலகலைக் கடைபிடிக்க மூன்றடிக்கு ஒரு சேர் போடப்பட்டிருந்தது.

சமூக இடைவெளியை உணர்த்தும் விதமாக ரேஷன் வாங்க வரும் பொதுமக்களுக்கு மூன்றடிக்கு ஒரு சேர் என்ற முறையில் வருகை தரும் அனைவரையும் வரிசையில் அமரவைத்து உதவிதொகை வழங்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் 697 நியாய விலைக்கடைகளிலும், தென்காசி மாவட்டத்தில் 507 நியாய விலைக் கடைகளிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

நெல்லையில் உள்ள 3,88,525 குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் குடும்ப அட்டைக்குத் தகுதியான அளவு ஏப்ரல் 2020 மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் விலையின்றி வழங்கப்படும்.

மேலும் மார்ச் 2020 மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்கத் தவறியிருந்தால் அதையும் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம். அனைத்து நியாய விலைக்கடை விற்பனையார்களுக்கும் முகக்கவசம் கையுரை கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது.

மேலப்பாளையம் பகுதி கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா வைரஸ்  நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நேரில் வழங்க தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆக ,நியாயவிலைக் காரர்களிடமிருந்து போலீஸ்காரர்கள் பாடம் கற்றுக்கொள்ள ஒரு பெரிய உதாரணமாக இது அமையும் என்பதில் மாற்றுகருத்து இல்லை!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top