கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை சீனா இந்தியாவுடன் இணைந்து செயல்படும்!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவும் சீனாவும் இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது.  அதன் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கி உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை நெருங்குகிறது.

வைரஸ் பரவிய இடமான  சீனா இப்போது அங்கு வைரசை கட்டுபடுத்திவிட்டதாக கூறுகிறது. தற்போது இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்படுவது மேற்கு உலக  நாடுகள்தான்.

ஆகையால்தான்,அமெரிக்கா சீனாவை நேரிடையாக குற்றம் சாட்டுகிறது. ஐ.நா மன்றம் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மறுத்து பேசிவருகிறதால், நேரிடையாக ஐநாவையும் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்கா.

அமெரிக்க நிதி பெரும் நிறுவனம் ஒன்றின் உதவியோடு . “சீனா தான் வைரசை பரப்பியது என்றும் அதன் பாதிப்பு கணக்குகள் போலியானவை என்றும் உலகமெங்கும் பரப்புரையை அமெரிக்கா முன்னெடுத்தது. அந்த பரப்புரையை இந்தியாவில் பாஜகவின் தாய் கழகமான ஆர்.எஸ்.எஸ் தான் மக்களிடையே சீனா எதிர்ப்பு மனநிலையை உருவாக்கியது.ஆனால் இந்திய பிரதமர் மோடியோ ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரத்தை கண்டிக்கவும் இல்லை, இந்திய தரப்பில் சீனாவை குற்றமும் கூறவில்லை. கொரோனாவை ஒழிக்க சீனாவுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் என்ற நிலை எடுத்தாகி விட்டது.

இந்தியாவுக்கு இப்போது சீனாவை பகைக்க வேண்டியதில்லை என்பது கடந்த வாரம் சீனாவின் மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யியுடனான வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உரையாடலில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. 

ஜெயசங்கர் வாங்குடனான தனது உரையாடலைப் பற்றி டுவீட் செய்த பின்னர், இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வீடோங், “வைரஸை முத்திரை குத்த வேண்டாம்” என்று இந்தியா ஒப்புக் கொண்டதாகக் கூறியிருந்தார். சன் வீடோங்,மீண்டும் புதன்கிழமை ஒரு டுவீட்டில், இந்தியாவும் சீனாவும் ஒரே படகில் பயணம் செய்யும் நண்பர்கள் என்றும் ஒருவருக்கொருவர் உதவ முயற்சிப்பதாகவும் கூறினார்.

ஏனென்றால்,சீனாவிற்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியாதான்.கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சீனாவிற்கு இந்தியாவோடு சேர்ந்து பயணித்தால்தான் மக்கள்தொகை மட்டுமல்ல கீழத்தேயப் பண்பாட்டு சூழலிலும் தக்க பொருத்தமாக இருக்கும் என்று சீன நினைக்கிறது.  

மேற்கு உலக நாடுகளுக்கு சீனா தன்னுடைய புதுப்பங்காளி உறவை காட்டவேண்டிய சூழலில், இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையில் ஏர் இந்தியா ஒரு சரக்கு விமானப் சேவையை தொடங்கி உள்ளதாக அரசு கடந்த செவ்வாயன்று அறிவித்தது பெரும் பலமாக சீனா விற்கு இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கு இந்த சேவை பயன்படுகிறது.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள ஜம்மு காஷ்மீரின்  சிறப்பு அந்தஸ்தை ரத்து விசயத்தில் சீனாவின் தலையீட்டை குறைக்க இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சீனாவுடன் சேர்ந்து பயணிப்பதாக கருதப்படுகிறது.சீனா இந்தியாவை பயன்படுத்துமா இந்தியா சீனாவோடு சேர்ந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!  

சேவற்கொடியோன்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top