பொருளாதாரத் தடையை நீக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்கா இழந்துவிட்டது: ஈரான்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சமயத்தில் எங்கள் மீதான பொருளாதாரத் தடையை நீக்கும் வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்க இழந்துவிட்டதாக ஈரான்  அதிபர் ஹசன் ரவ்ஹானி  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி  கூறும்போது, “பொருளாதாரத் தடையை நீக்குவதற்கான சிறந்த வாய்ப்பை அமெரிக்கா இழந்துவிட்டது. ஈரான் மீது விதிக்கப்பட்ட நியாயமற்ற பொருளாதாரத் தடையை நீக்குவதற்கு அமெரிக்காவுக்கு சிறந்த வாய்ப்பாக இருந்தது.  ஈரான் மீதான அமெரிக்காவின் விரோதம் வெளிப்படையானது” என்று தெரிவித்தார்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகப்படியான பாதிப்பை ஈரான் எதிர்கொண்டுள்ளது.

ஈரானில் 40,000க்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை மீறி  ஈரான் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரத் தடை விதித்தது. இதன் காரணமாக  கடுமையான ஈரான் பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது.இந்த பொருளாதார நெருக்கடியிலும் கொரோனாவை தாக்கு பிடித்து தன்னை காப்பாற்றிக்கொண்டுள்ளது ஈரான்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top