இந்தியாவின் முக்கியநகரங்கள் கொரோனா வைரஸ் தொற்று‘அபாய ஸ்பாட்கள்’ என அறிவிக்கப்பட்டு இருக்கின்றன

கொரோனா வைரஸ்  பரவலைத் தடுக்கும் பொருட்டு அரசு தனது கவனத்தை கொரோனா தொற்றின் மையமாகத் திகழும், ‘ஹாட்ஸ்பாட்கள்’ என்று அழைக்கப்படும் நாட்டின் பகுதிகளின் மீது திருப்பியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

டெல்லி, உ.பி, கேரளா, மகாராஷ்ட்ர மாநிலங்களில் தலா 2 ஹாட்ஸ்பாட்க்ளும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 1 வைரஸ் ஹாட்ஸ்பாட்டும் கண்டறியப்பட்டுள்ளன. குஜராத் மிகவும் மோசமான பின் தங்கிய மாநிலமாக கருதப்படுகிறது .

ராஜஸ்தானில் 83 பேருக்கு கரோனா பாசிட்டிவ் ஆனதில் 26 பேர் இந்த ஜவுளி உற்பத்தி நகரத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள், சிகிச்சைக்குப் பிறகு 8 பேருக்கு நெகெட்டிவ் ஆனது.

பில்வாராவில் இதுவரை 1,194 சாம்பிள்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.

பெரிய அளவில் இங்கு ஸ்க்ரீனிங் நடைபெற்று வருகிறது. சுமார் 26 லட்சம் பேர்களுக்கு இங்கு ஸ்க்ரீனிங் நடைபெற்று வருகிறது.

2 பேர் கொரோனாவால் இதுவரை பலி ஆகியுள்ளனர் இதுவும் பில்வாராவில்தான் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்தான் முதல் கேஸ். பெரும்பாலான கொரோனா நோயாளிகள் இங்கு மருத்துவமனை ஊழியர்கள் அல்லது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றவர்களாகவே இருக்கின்றனர்.

டெல்லியை அடுத்த மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கவுதம் புத்தா நகரில் இதுவரை 38 கொரோனா தொற்று நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் இதுதான் அதிக பாதிப்பு எண்ணிக்கை கொண்டது.

இந்த 38 நோயாளிகளில் 24 நோயாளிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனியார் நிறுவனம் ஒன்று காரணமாகியுள்ளது, இந்த நிறுவனத்தின் மீது மக்கள் வாழ்க்கையை உயிரை அச்சுறுத்துவதாக வழக்கு தொடரப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

626 சாம்பிள்கள் இங்கு சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, 1852 பேர் கண்காணிப்பில் உள்ளனர், நொய்டாவில் பல்வேறு இடங்களில் 291 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கவுதம புத்தர் நகரிலிருந்து 6 நோயாளிகள் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 32 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு உ. பி முதல்வர் ஆதித்தியநாத் யோகி  பங்கெடுத்த ராமநவமி விழாவில் கலந்துகொண்டவர்களையும் பரிசோதனை செய்ய மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

மீரட்: இது ஒரு மேற்கு உத்தரப்பிரதேச மாவட்டமாகும், இதுவும் உ.பி.யின் 2வது ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. இங்கு 100 பேருக்கு மேல் கொரோனாவுக்காக அனுமதிக்கப்பட்டதில் 19 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்களன்று சோதனை முடிவுகள் வெளியான 17 பேர்களில் 6 பேர்களுக்கு உறுதியானது. இந்த 6 பேர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

மகாராஸ்ட்ராவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக மக்களை ஆங்காங்கே கொரோனா சோதனைக்குட்படுத்தியதில் சிலபல பேர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவர, மாநில சுகாதார துறை கொலிவாடா என்ற வொர்லி பகுதியையும் கொரேகான் புறநகர் பகுதியையும் இரண்டு ஹாட்ஸ்பாட்களாக அடையாளம் கண்டுள்ளது.

மும்பையில் 8 பேர் பலியாகியுள்ளனர், 167 பாசிட்டிவ் கேஸ்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை மகாராஷ்ட்ராவில் 230 கோவிட்-19 கேஸ்கள் பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 10 பேர் பலியாகியுள்ளனர். 39 பேர் மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 181 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புனேயில் 46 பேருக்கு செவ்வாயன்று கொரோனா தெரியவந்துள்ளது. மகாராஷ்ட்ராவில் முதல் 2 கேஸ்களே பாசிட்டிவ் என்று வந்தது புனேயில்தான்.

புனேயில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கோவிட்-19னால் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் உள்ளுறுப்புகள் செயலிழந்து ஒருவர் பலியாகியுள்ளார்.

இதுவரை அயல்நாட்டு பயணம் செய்த அவர்களுடன் தொடர்புடைய சுமார் 3, 500 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

2,216 பயணிகள் கண்காணிப்பில் உள்ளனர், இதில் 1,403 பேர் தங்களது 14 நாட்கள் தனிமைக் காலக்கட்டத்தை நிறைவு செய்தனர், 813 பேர் இன்னமும் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்தியாவில் குஜராத் மிகவும்  கவலை அளிக்கும் வகையில் உள்ளது. குஜராத்தில் 53 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். அதாவது அங்கு கொரோனா பாதித்த 10ல் ஒருவர் பலியாகிறார். அதாவது குஜராத்தில் இறப்பு விகிதம் 10% ஆக உள்ளது. இந்தியாவில் இத்தாலிக்கு இணையான இறப்பு விகிதம் கொண்ட ஒரே மாநிலம் குஜராத்தான். அதிர்ச்சி அடைய வைக்கிறது அங்கு போதிய மருத்துவ மனைகள் இல்லாததும், மருத்துவர்கள் இல்லாததும்தான் இதற்கான காரணம் என்கிறார்கள். அதேபோல் அங்கு கொரோனா சோதனை மிகவும் மெதுவாக செய்யப்படுவதாக புகார் உள்ளது. இந்திய மக்களை இந்த புள்ளி விவரம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 2004 லோக்சபா தேர்தலின் போது குஜராத் மாடல் என்று விளம்பரம் செய்யப்பட்ட அதே மாநிலம்தான் தற்போது இப்படி ஒரு மோசமான நிலையில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக ஏற்படும் இறப்பில் குஜராத் வேகமாக முன்னேறி வருகிறது. மற்ற எந்த மாநிலங்களையும் விட குஜராத்தில்தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது

குஜராத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 73 கொரோனா தொற்றுக்களில் 23 பேர் அகமதாபாத்தில் உள்ளவர்கள். குறிப்பாக அகமதாபாத் நகரில் உள்ளவர்கள்.

குஜராத்தின் 6 கொரோனா மரணங்களில் 3 பேர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள். 5 பேர் குணமடைந்தவர்களில் 4 பேர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள்.

அகமதாபாத் நகரம் ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது , நோயாளி ஒருவர் இருக்கும் பகுதியில் 3 கிமீ சுற்றுப்பரப்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்த லாக்-டவுன் தான். சுகாதார பணியாளர்கள் தவிர யாரும் உள்ளே நுழையவும் வெளியே வரவும் முடியாது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top