நிஜாமுதீனின் சம்பவம்; யாரை குற்றம் சொல்ல வேண்டும் – மத்திய அரசா? அல்லது தப்லிகி ஜமாத்தா ?

தப்லீக் ஜமாத் விதிமுறைகளை மீறியதா.?
The Quint ஆங்கில பத்திரிக்கை செய்தி தமிழில்

இந்துத்துவ சார்பு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் “கொரானா ஜிஹாத்” என்று பரப்பப்படும் விஷமத்தனமான கருத்துக்கள் பொது வெளியில் மதவாத துவேஷத்தை மேலும் மோசமாக்கும். என The Quint ஆங்கில பத்திரிக்கை கூறுகிறது

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு உத்தரவு நாளான மார்ச் 22 அன்று அல்லது அதற்குப் பிறகு எந்த மத நிகழ்வுகளும் நடத்தப்படவில்லை என்றும் மார்ச் 22 ஆம் தேதி, நிஜாமுதீன் மர்க்கஸில் நடந்து வந்த நிகழ்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது என்றும் தப்லிக் ஜமாஅத் மர்க்கஸ் தலைமையகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த கூற்றின்படி தேசம் தழுவிய ஊரடங்கிற்கு தப்லீக் ஜமாஅத் முழு ஒத்துழைப்பு நல்கியுள்ளது.

டெல்லி அரசாங்க வழிகாட்டுதல்களைப் பார்க்கும்போது, ​​இந்த விஷயம் இன்னும் கொஞ்சம் சிக்கலானதாகிவிடும். தப்லிகி ஜமாத் மௌலானாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தில்லி அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை என்பது இரண்டு அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டது – ஒன்று மார்ச் 13 & 16 மற்றும் மற்றொன்று மார்ச் 12 .

முதலாவதாக, தப்லீக் ஜமாஅத் மர்க்கஸ் மார்ச் 13 ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை மீறியதாக தில்லி அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி 200 க்கும் மேற்பட்டோர் கூடுவதை அரசு தடைசெய்திருந்தது. இருப்பினும் பிரச்சினை என்னவெனில் மேற்கண்ட அறிவிப்பு“அனைத்து விளையாட்டுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள்” பற்றிப் பேசுகிறது, இது மத ரீதியீலான கூட்டங்களுக்கும் நீட்டிக்கப்படுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மார்ச் 16 அன்று தான் டெல்லி அரசாங்கம் டிஸ்கோத்தேக்குகள் மற்றும் திரையரங்குகளுக்கும் மேலதிகமாக மதக் கூட்டங்களைத் தடை செய்து அறிவிப்பை வெளயிட்டது.

எனவே மார்ச் 13ம் தேதியின் அறிவிப்பை தப்லீக் ஜமாத் எங்கே மீறியது.? மார்ச் 13-15 நடத்தப்பட்ட தப்லீக் ஜமாத்தின் கூட்டத்தின் அடிப்படையில் அது மார்ச் 16ம் தேதி அறிவிப்பையும் மீறவில்லை.

தப்லிகி ஜமாஅத் தலைவர் மௌலானாவிற்கு எதிரான எஃப்.ஐ.ஆரை நியாயப்படுத்த டெல்லி அரசாங்கத்தால் மேற்கோள் காட்டப்படும் இரண்டாவது அறிவிப்பு மார்ச் 12 ம் தேதியுடையது. இதில் குறிப்பாக சொல்லப்பட்ட 8 மற்றும் 9 பிரிவுகளாகும்.

-கடந்த 14 நாட்களில் COVID-19 பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து பயண வரலாற்றைக் கொண்ட எந்தவொரு நபரும் கொரானா தொற்று அறிகுறிகள் இருப்பின் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பிரிவு 8 கூறுகிறது.

-அதேபோன்று கடந்த 14நாட்களில் COVID-19 பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்தோர் கொரானா தொற்று அறிகுகள் இல்லாமல் இருந்தாலும் 14நாட்கள் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென பிரிவு 9 கூறுகிறது.

எனவே மேற்சொன்ன உட்பிரிவுகளின் அடிப்படையில் மர்க்கஸ் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

“பிப்ரவரி 27 க்குப் பிறகு கோவிட் -19 பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்த போதிலும் கட்டுப்பாட்டு அறைக்கு புகாரளிக்கத் தவறிவிட்டனர்.

பிப்ரவரி 27 க்குப் பிறகு ஒரு கோவிட்-19 பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை.
இந்த இரண்டு பிரிவுகளிலும் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.”

மார்ச் 13 மற்றும் 16ம் தேதியின் அறிவிப்புகள் நிகழ்ச்சியை நடத்திய அமைப்பாளர்களின் பொறுப்பை வலியுறுத்தியுள்ளது. ஆனால் ​​மார்ச் 12ம் தேதியின் அறிவிப்பு என்பது தனிப்பட்ட பயணிகள் மீது விதிக்கப்பட்ட பொறுப்பு எனவே அமைப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய இதைப் பயன்படுத்த முடியுமா என்பது விவாதத்திற்குரியது.

தப்லீக் ஜமாத்தை மட்டும் குறை சொல்வது நியாயமா.?

தப்லீக் ஜமாஅத் மௌலானாவுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர் நியாயமானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த அமைப்பை குற்றம் சாட்ட முடியாது.

சீனாவில் COVID-19 இன் தாக்கம் 2019 டிசம்பரில் இருந்து தொடங்கியதி. தாய்லாந்தில் முதன்முதலில் பதிவுசெய்யப்பட்டது ஜனவரி 13 அன்று. இது சீனாவுக்கு வெளியே பதியப்பட்ட முதல் COVID-19 வழக்கு.

மலேசியா தனது முதல் கொரானா தொற்று நோயாளிகள் குறித்து ஜனவரி 25 அன்று அறிவித்தது. இந்தியா தனது முதல் தொற்றை ஜனவரி 30 அன்று நடத்தியது. இந்தோனேசியா மிகவும் பின்னர் தான் பாதிக்கப்பட்டது.

எனவே ஜனவரி மாதத்தில் தாய்லாந்து போன்ற நாடுகளில் வைரஸ் தாக்கியிருப்பதால், தப்லிகி ஜமாஅத் அங்கிருந்து பார்வையாளர்களை அழைக்காமல் கவனமாக இருந்திருக்க வேண்டும்.

மார்ச் முதல் வாரத்தில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகின் பல்வேறு பகுதிகளில் கடுமையாக இருந்தது. ஆகையால், மார்ச் இரண்டாவது வாரத்தில் ஒரு பெரிய சபையை நடத்துவது தப்லீக் ஜமாஅத் மர்க்கஸின் பொறுப்பற்ற செயல் அதுவும் கணிசமான வெளிநாட்டு பார்வையாளர்களைக் கொண்டது எனும்போது அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அரசு என்ன செய்தது..?

கொரானா தொற்றுப் பரவலின் பெரிய பழி இந்திய அரசையே சாரும்.

மார்ச் 31 ம் தேதி உள்துறை அமைச்சகத்தின் வெளியீட்டின்படி, Immigration Office (பிப்ரவரி 1 முதல்) பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து சர்வதேச அளவில் வருகை தரும் அனைத்து விவரங்களும் அவர்கள் நிரப்பிய சுய அறிவிப்பு படிவத்தின் அடிப்படையில் மாநில அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்கிறது.

-இதன்படி ​​பிப்ரவரி 1 முதல் அரசாங்கம் இதைக் கண்காணிக்கத் தொடங்கியிருந்தால், COVID-19 பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஏன் இந்தியாவுக்கு முதலில் அனுமதிக்கப்பட்டனர்?
பிப்ரவரி முழுவதும் அவர்கள் ஏன் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்படவில்லை?


மார்ச் மாதத்தில் தப்லீக் ஜமாத்தின் சபை, முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் கலந்து கொண்ட ராம் நவ்மி கொண்டாட்டங்கள் அல்லது பஞ்சாபில் ஹோலா மொஹல்லா போன்றவற்றில் ஏன் பெரும் மக்கள் கூட்டங்களை அனுமதித்தார்கள்? பாஜக கூட மத்திய பிரதேசத்தில் தனது அரசாங்கத்தை அமைப்பதற்காக ஒரு பெரிய விழாவோடு கொண்டாடியது.

தப்லிகி ஜமாஅத் மார்க்கஸின் விடயத்தில் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் காவல்துறையினர் சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

நிஜாமுதீன் காவல் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில்தான் தப்லீக் மர்க்கஸ் அமைந்துள்ளது. மார்ச் இரண்டாவது வாரத்தில் நடந்த சபைகளைத் தடுக்க காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

மர்க்கஸுக்கு வரும் வெளிநாட்டினர் நிஜாமுதீன் காவல் நிலையத்திற்கு வருகை தருவதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது. COVID-19 பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து வந்த வெளிநாட்டவர்கள் ஏன் காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை?

தப்லீக் ஜமாத்தினர் பொடுபோக்குத்தனமாக செயல்பட்டுள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் COVID-19 அச்சுறுத்தலை மிகவும் தாமதமாக உணர்ந்து விமான நிலையங்களிலேயே வைரஸ் தொற்றை தடுப்பதற்கான போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது இந்திய அரசின் பெரிய தவறாகும்.

இந்துத்துவ சார்பு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் “கொரானா ஜிஹாத்” என்று பரப்பப்படும் விஷமத்தனமான கருத்துக்கள் பொது வெளியில் மதவாத துவேஷத்தை மேலும் மோசமாக்கும்.

கசாலி மீரான்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top