கொரோனா குறைந்த நிலையில் சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4 பேர் பலி

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்திருந்த நிலையில் சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. புதிதாக யாருக்கும் தொற்றாத நிலையில் திடீரென  அங்கு புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு வந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 4 பேர் பலியாகியும் உள்ளனர்

இதன் மூலம் சீனாவில் ஒட்டு மொத்தமாக பலி எண்ணிக்கை 3,304  ஆக அதிகரித்துள்ளது.  சீனா முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 81 ஆயிரத்து 470-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், குணமடைந்தவர்களும் அடங்குவர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top