ஊரடங்கில் தொலைந்த வாழ்க்கை! சொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருப்பு!!

ஊரடங்கு உத்தரவை அமலில் கொண்டு வந்த அரசு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தவிதமான உத்திரவாதமும் கொடுக்காததால், சொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விடிய விடிய காத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பெரும் பாதிப்பை உருவாக்கி, இன்று உலகமெங்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ்ஸை  

கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவால் 24 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகளவில் பாதிப்பு 6.5 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் மட்டுமே கிடைக்கும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவால், வெளிமாநிலங்களில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.மத்தியில் ஆளும் பாஜக – மோடி அரசும், டெல்லி கெஜ்ரிவால் மாநில அரசும் இந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு  எந்தவிதமான உத்திரவாதமும் கொடுக்கவில்லை  

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விடிய விடிய காத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் டெல்லியில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். வேலை இல்லாத காரணத்தால், அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே செல்லும் செய்திகள் கடந்த சில நாட்களாக வெளிவந்தன. 

இதையடுத்து, டெல்லியில் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விடிய விடிய காத்திருந்தனர். முகக்கவசம் மற்றும் கைக்குட்டைகளை முகத்தில் கட்டிக்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுக் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களை அழைத்து வர 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளதாக உத்தரப்பிரதேச அரசும், 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று டெல்லி அரசும் அறிவித்திருந்தது.ஆனால் கடைசிவரை பஸ் வராததால் மக்கள் நம்பிக்கை இழந்து,பசியும், பட்டினியுமாக அவதிப்படுகிறார்கள்

சனிக்கிழமையன்று, உத்தரபிரதேச அரசு 1,000 பேருந்துகளை அனுப்பிகிறோம் ஜீரோ பாயிண்டில் மக்களை காத்திருக்க சொல்லியது. மக்களை திரும்ப அழைத்து வருவதாக அறிவித்தது, இந்த அறிவிப்பு  மக்கள் கூட்டத்தை மேலும் அதிகரிக்க செய்தது

ஞாயிற்றுக்கிழமை யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள ஜீரோ பாயிண்டில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கித் தவித்தனர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் நடந்தே சென்றனர், வேலையின்மை அச்சம் மற்றும் கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் தங்கள் குடும்பங்களுடன் ஒன்றுபடுவதற்கான விருப்பம் மோடி பாஜக அரசின் வஞ்சகம் ஆகியவற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஜீரோ பாயிண்ட் என்பது யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நியமிக்கப்பட்ட இடமாகும், இது புது தில்லியை ஆக்ராவுடன் இணைக்கிறது, அங்கு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் வழக்கமாக பயணிகளை அழைத்துச் செல்கிற இடமாகும்

 நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்துவிட்டு, மக்களை திரும்ப அழைத்து வருவதற்கு 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்வதாக அறிவித்தது, மக்கள் கூட்டம்,கூட்டமாக சேருவதற்கு  தூண்டியது. இது நாடு தழுவிய ஊரடங்கை கேலி செய்தது போலிருந்தது

எக்ஸ்பிரஸ்வேயிலும், டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்திலும்  பல்லாயிரக்கணக்கான மக்கள்  காத்திருக்கும் வீடியோக்களும், புகைப்படங்களும் சனிக்கிழமை வைரலாகி, இந்த வெளியேற்றத்தை சமாளிக்க அரசாங்கம் போதுமான அளவு தயாராக இல்லை என்பதை கேள்விகளாய் எழுப்பியது.இன்னும் மக்கள் காத்துக்கொண்டே இருக்கிறார்கள் நம்பிக்கையை பிடித்துக்கொண்டு….

சேவற்கொடியோன்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top