ஏழை, கூலித்தொழிலாளர்களுக்கு எதிராக கெஜ்ரிவால் அறிவுரை;மக்கள் எதிர்ப்பு!

கொரோனா வைரஸ்ஸின் ஆபத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிற இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் ரசிகர் போல புலம்பெயர்ந்து சொந்த ஊருக்கு போகும் ஏழை, எளிய மக்களுக்கு அறிவுரை சொல்லி வசமாக மாட்டிக் கொண்டார்.  

கொரோனா வைரஸ் வீரியத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று  மத்திய அரசு நினைத்தது. இதனால், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது எந்தவிதமான முன்னேற்பாடும் இன்றி  21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

பெரும்பாலான மத்தியதர மக்கள் வீட்டிற்குள்ளே இருக்க ஆரம்பித்தனர். ஆனால்,கூலி வேலை செய்யும் அன்றாடா ஏழைத் தொழிலாளர்கள் கையில் இருக்கும் காசை வைத்துக்கொண்டு ஒரு நாள் மட்டும் வீட்டுக்குள்ளே இருந்தார்கள். பிறகு வேலையும் இல்லை, கையில் காசும் இல்லை ,மோடி அரசும் சரி, டெல்லி அரசும் சரி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் சிலர் வெளியே நடமாட ஆரம்பித்தனர். பழம் ,ரொட்டி வாங்க பசியில் வெளியே வந்த மக்களை டெல்லி போலீஸ் சட்டஒழுங்கு பிரச்சனையாக பார்த்தது ,அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடி அடியில் இறங்கினார்கள்.

இந்நிலையில்தான் நேற்றிலிருந்து வேறு மாநிலத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்திற்கு திரும்ப தொடங்கினர். டெல்லியில் ஒரு பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் கூடியதால் அரசுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.ஒருவேளை உணவு கூட இந்த மத்திய, மாநில அரசால் கொடுக்கமுடியவில்லை.இந்தியாவில் ஏழைகள் இருக்க கூடாதா? என்கிற கேள்வி எழுந்தது! தேசம் முழுவதும் இதை கேள்வி கேட்க ஆரம்பித்ததும்.

இந்த பயணத்தை தடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இந்நி்லையில் மக்கள் வெளியே வரக்கூடாது என்று டெல்லி மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மக்களுக்கு ஒருவேளை உணவு கொடுக்க வக்கில்லாத கெஜ்ரிவால்

 ‘நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்’ என்பதே பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவின் மந்திரம்’ என சொன்னதும் கூலித் தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

மத்திய அரசு எதற்காக சமூக விலகலை ஏற்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததோ அந்த நோக்கத்திற்கு எதிராக மத்திய,மாநில அரசுகள் செயல்படுவது ஏன்? ஏழை, எளிய மக்களின் பிரச்சனையை தீர்க்க வழி சொல்லாமல் அவர்களை  ‘‘நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்’’ என்ற மோடியின் வார்த்தையை ஒரு ரசிகன் போல திரும்ப, திரும்ப  கூறுவது ஏன்? இது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல!.

மற்றும், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் “நீங்கள் இதை பின்பற்றாவிடில், ஊரடங்கு உத்தரவு வெற்றி பெறாது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாடு தோல்வியடைந்து விடும்.நீங்கள் சம்பாதித்திருந்தால், அதை பயன்படுத்துவதற்கான நேரம் இது’’ என்றார்.இதனால் கடுப்பாகி போனார்கள் மக்கள்.

கையில் காசு இல்லாமல், பட்டினி கிடந்து, சாகும் நிலையில் சொந்த ஊரை நோக்கி நடந்து சென்றுகொண்டிருக்கும் மக்களை பார்த்து  “நீங்க சப்பாதித்த காசை செலவு செய்யுங்கள்” என்று சொல்லுவது முட்டாள் தனமான, மனிதாபிமானமற்ற சொல் அல்லவா! ஒரு முதலமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா?  

.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top