ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் உதவி; டெரிக் ஓ பிரையன் நன்றி!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவினால் உணவின்றி ,போதிய பணமும் இன்றி  சென்னையில் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், சென்னையில் தவித்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த 40 தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து அந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டன.

இதற்கு டெரிக் ஓ பிரையன் டுவிட்டரில் நன்றி தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில், “டெரிக் ஓ பிரையன் மற்றும் மம்தா பானர்ஜிக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். இதுபோன்ற காலங்களில் அனைத்து மாநிலங்களும் எல்லைகள், கட்சி சார்புகளை கடந்து பாதிப்புக்குள்ளாக கூடியவர்களுக்கு உதவவேண்டும்’ என கூறியுள்ளார்.

இந்தநிலையில், குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 3 பேர் மரணம் அடைந்ததாக வந்த செய்தியை தொடர்ந்து, தலைமைச் செயலாளர் க.சண்முகத்தை, மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார்.

இதற்கு தலைமைச் செயலாளர், “சுகாதாரத்துறை செயலாளர் மூலம் விரைவில் உரிய விளக்கம் அளிக்கப்படும்” என்று கூறினார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்ற மாநிலங்களில் வாழும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளிகளுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து  அந்தந்த மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதியிருந்தார்  என்பது நினைவு கூறத்தக்கது  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top