கொரோனா தடுப்பு நடவடிக்கை;அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன், முதல்-அமைச்சர் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா எனும் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் மனதில் உள்ள பதற்றத்தை தணித்து, ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான இந்த பணியில் ஆளுங்கட்சி மட்டுமின்றி, அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஈடுபடுவதுதான் சிறப்பாக இருக்கும்.

வெகுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய இந்த பேரிடரை ஆளுங்கட்சி மட்டும் தனித்து நின்று துடைத்துவிட முடியாது. அனைத்து கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடுபடவேண்டிய தருணம் இது. ஆகவே, அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என்று முதல்- அமைச்சர் பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படி ஒரு கூட்டத்தை கூட்டுவதில் பிரச்சினை இருக்கும் என்றால், அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் ‘வீடியோ கான்பரன்ஸ்’ (காணொலிக்காட்சி) மூலம் கலந்து ஆலோசனை நடத்துவதற்கான ஒரு ஏற்பாட்டினை செய்து கொண்டு மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து கொரோனா தடுப்புக்கு, ஜனநாயக ரீதியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் முதல்-அமைச்சர் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.என்று அறிக்கையில் கூறியுள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top