கன்னியாகுமரியில் மேலும் ஒருவர் கொரோனா வார்டில் பலி! சிகிச்சை பலனின்றி இறந்த 3வது நபர்!

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.ஏற்கனவே இரண்டு பேர் இதே மருத்துவமனையில் பலியாகி உள்ள நிலையில்.இவர் மூன்றாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது . 

கன்னியாகுமரி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது இரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மூன்றாவது உயிரிழப்பாக 66 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.உயிரிழந்தவர் ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தைச் சேர்ந்தவர்.

அவர் கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளார். அவர் அங்கிருந்து திரும்பிய பின்னர் தான் காய்ச்சல், இருமல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு வரைஸ் தொற்று இருப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ரத்தம் மற்றும் சளி பரிசோனை முடிவுகள் வந்த பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் கூறினர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ள நிலையில் சாவு எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே இறந்து போகிற நிலை இருப்பது முகவும் கவனிக்கத்தக்கது. மிகவும் தாமதமாக டெஸ்ட் எடுப்பதை தவிர்த்து உடனடியாக டெஸ்ட் எடுக்கவேண்டும்.குறைந்தது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த முறையான  ‘டெஸ்ட் ,டெஸ்ட் ,டெஸ்ட்’ மூன்று முறை எடுக்கவேண்டும்   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top