இந்தியாவில் விரைவாக பரவும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது.இன்னும் அதிகமாக எண்ணிக்கை உயரும் என்கிறார்கள்.மக்கள் விழிப்புணர்வு இதற்கு பெரும் மருந்து என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.இந்தியாவில் கொரோனாவின் தாக்குதலை எதிர்கொள்ள அரசு என்ன, என்ன செய்கிறது? மக்கள் கையில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு போவது சரி அல்ல! இந்நிலையில் அரசின் நடவடிக்கைகள் ரகசியமாகவே இருக்கிறது என்றும் பேச்சு அடிபடுகிறது. .  


சீனாவில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 873 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 177 பேருக்கும், கேரளாவில் 165 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை இந்தியாவில் 19 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக நாடுகளும் உலக சுகாதார நிறுவனமும் அதிகமாக டெஸ்ட் எடுக்கவேண்டும் என்கிறது ஆனால் இந்தியாதான் உலகிலே குறைவான டெஸ்ட் எடுக்கிற நாடுகளில் முதலில் இருக்கிறது.மத்தியில் ஆளும் மோடி அரசு இதை கவனத்தில் கொண்டு, மக்களுக்கு அதிக டெஸ்ட் எடுக்க வேண்டும்  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top