கொரோனா தொற்று; மகாராஷ்டிராவில் 11 ஆயிரம் கைதிகளுக்கு அவசரகால பரோல்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 11 ஆயிரம் சிறைக்கைதிகளை அவசர கால பரோலில் அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது .இந் நிலையில், வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

கொரோனா வைரஸ் சிறைச்சாலைகளில் பரவாமல் இருக்க சிறைத்துறையும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடப்பட்டது. அதில் முதல் கட்டமாக சிறு குற்றங்களில் ஈடுபட்டு ஜாமீன் கிடைக்காமல் இருக்கும் கைதிகளை ஜாமீனில் விடுவிக்கப்படுகின்றனர்.

அதேபோல், குறிப்பிட்ட வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பரோலில் விடுவிக்கப்படுகின்றனர்.

அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறைகளில் உள்ள 11 ஆயிரம் கைதிகளை பரோலில் விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

7 ஆண்டு மற்றும் அதற்கு குறைவான தண்டனை பெற்று சிறையில் உள்ள கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் 11 ஆயிரம் பேரையும் அவசரகால பரோலில் விடுவிக்க உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top