கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது; பரிசோதிக்கும் மையங்கள் வேண்டும்;உலகசுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ்ஸால் ஏற்படும்  பாதிப்பு இந்திய மக்களின் உடல்நிலை மட்டுமல்ல இந்தியாவின் பொருளாதாரம்,பண்பாடு ,வாழ்நிலை என்று எல்லாத் தரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது  

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்த பல வழிகளில் யோசித்து ,ஆராய்ந்து உலக நாடுகளுக்கு அறிவுரை வழங்குகிறது.அந்த வகையில் ஆரம்பத்தில் உலக சுகாதார அமைப்பு சொன்ன டெஸ்ட் ,டெஸ்ட் ,டெஸ்ட் என்கிற யோசனையை இந்தியா ஏற்கவில்லை.அதற்கு காரணம் மோடி அரசு இயற்றிய குடிமக்கள் திருத்தச்சட்டத்திற்கு UN பிரதிநிதிகள் ஏற்கவில்லை மட்டுமல்லாமல் அதை எதிர்த்தும் பேசி, உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள் என்கிற அடிப்படையில், UN சுகாதார அமைப்பு சொன்ன யோசனையை இந்தியாவின் ICMR [Indian Council of Medical Research ] நிராகரித்து விட்டது.

பிறகு உலக மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் அறிவுரையின் படி வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொண்டு விட்டது.ஆனால் அதற்கான கட்டமைப்பை இன்னும் உருவாக்கவில்லை.

இந்நிலையில், கொரோனா வைரசை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டுமே பலன் தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மனித குலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி உள்ளது. மனிதர்கள் மூலமாக வேகமாக பரவி வருவதால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர். 

பொதுமக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலை பின்பற்றுவதாலும் வைரசை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது. 

இந்நிலையில், கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அந்தானம் கேப்ரியசஸ் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவலை குறைக்க, பல நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன. ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க சொல்வது சுகாதாரத் துறையின் மீதான அழுத்தத்தை குறைக்கும். வைரசை அழிக்க  இந்த நடவடிக்கை மட்டுமே போதுமானதல்ல. 

கொரோனா வைரசை ஒழிக்க இந்த நேரத்தை பயன்படுத்த அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். சுகாதாரப் பணியாளர்கள், பரிசோதிக்கும் மையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு பரிசோதிக்கும் வசதியை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரிடம் இருந்து யாருக்கு நோய் வருகிறது என்பதை கண்டறிய தெளிவான திட்டம் தேவை.என்று கூறி இருக்கிறார். இந்தியா இதை கேட்டு அதன்படி நடக்குமா?இல்லை ஊரடங்கு மூலம் தீர்த்துவிடலாம் என்று நினைக்குமா?பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் .

சேவற்கொடியோன்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top