ஏழைகள் குறித்து யோசிக்காத அரசு!உணவின்றி 135 கிலோ மீட்டர் நடந்து சொந்த ஊரை அடைந்த வாலிபர்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவால் சாப்பிட உணவு கூட இல்லாமல் 135 கிலோ மீட்டர் நடந்தே தினக்கூலி வாலிபர் ஒருவர் சொந்த ஊரை அடைந்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இருந்து இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால், தினக் கூலித்தொழிலாளர்களுக்கு ,ஏழை எளிய மக்களுக்கு உணவுக்கு எந்தவிதமான வசதியையும் செய்யாமல் இந்த ஊரடங்கு பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டிருப்பது  மிக வேதனையான விஷயம்

தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649-ஐ தாண்டியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு எண்ணிக்கை 135-ஐ தொட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மகாராஷ்டிரா அரசு கடுமையாக பின்பற்றி வருகிறது. வாகனங்கள் ஏதும் ஓடாததால் அங்குள்ள மக்கள் மற்ற இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காய்கறிகள் வாங்க,கோதுமை வாங்க வெளியே வரும் ஆட்களை போலீஸ் லத்தியால் தாக்குகிறது.

இந்நிலையில், சந்த்ராபுர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான தினக்கூலி வாலிபர் நாக்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது வேலை இல்லாததால்,அரசும் ஏதும் செய்யாததால்  சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியு செய்தார். வாகனம் ஏதும் இல்லாததால் நடந்தே சொந்த ஊரை அடைய வேண்டும் என எண்ணி, நடக்க ஆரம்பித்தார். சுமார் 135 கிலோ மீட்டர் தூரம் சாப்பிடுவதற்கு உணவின்றி நடந்தே சொந்த ஊரை அடைந்துள்ளார்.பார்கிறவர்களை  கண்கலங்க செய்கிறது.

இதுதான் இந்தியாவின் இன்றைய நிலை.ஊரடங்கு உத்தரவு போடுவதற்கு முன்பு ஏழை எளிய  மக்களை பற்றி மோடியோ அவர் அரசோ நினைத்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்குமா? நம் அரசு ஒரு விஷயம் குறித்து யோசிக்கிறது என்றால்,அந்த யோசனையில் ஏழைகளுக்கு இடமே இல்லை என்பதுதான் இந்த நிகழ்வு வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது   

கொரோனா தொற்று குறித்து அச்சப்படாமல் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பீதியால் பெரும்பாலானோர் சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டனர்.சொந்த கிராமத்தில் வாழ வசதி இல்லை என்பதால்தான் இவர்கள் வெளியே வேலைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top