மீண்டும் ஒருவர் இறப்பு நாகர்கோவிலில் கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்தவர் மரணம்

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தார்.தமிழகத்தில் கொரோனாவால் நிகழ்ந்த இரண்டாவது மரணம் இது  

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் முன்பாகவே அவர் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 10க்கும் அதிகமானோர் கொரோனா அறிகுறியோடு அட்மிட் செய்யப்பட்டிருந்தாலும், யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை. இதனால் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கோடிமுனை பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரது சளி மாதிரி, நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது. அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை. இந்நிலையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 40 வயது நபர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவருக்கு ஏற்கெனவே கல்லீரலில், மூளைக்காய்ச்சல் பிரச்சினை இருந்ததாகவும், அந்த நோய் மிகத்தீவிரம் அடைந்ததாலுமே இறந்திருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் கடந்த மார்ச் 3-ம் தேதி குவைத் நாட்டில் இருந்து, சொந்த ஊருக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, மூன்று தினங்களுக்கு முன்பு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயதுப் பெண் ஒருவர் இறந்தார். இறப்புக்குப் பின்னர் வெளியான அவரது சளி பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அதேநேரம் அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே இதயநோய் உள்ளிட்ட வேறு சில உபாதைகளும் இருந்ததாலேயே அந்த உயிரிழப்பு நடந்ததாகவும் தெரியவந்தது.

கொரோனா வைரஸ் புதிய நோயை உருவாக்குவதில்லை, ஏற்கனவே நோயல் பாதிக்கப்பட்டவர்களின்  நோயை தீவிரப்படுத்துவத்தின் மூலம் மரணத்தை நிகழ்த்துகிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனேகம்பேர் ஏற்கனவே வேறொரு நோயால் பாதிக்கப்பட்டவர்களே என்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது!  

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top