மக்கள் ஊரடங்கில் இருக்கும் போது ராமர் விக்கிரகத்தை இடம்மாற்றிய உ.பி.முதல்வர்-யோகி!

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாடுவிடுபட பிரதமர் மோடி மக்கள் சமூக விலக்கம் கடைபிடிக்க வேண்டும் என்றார். 21 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அடைந்து கிடக்க ஆணை பிறப்பித்து இருந்தார். மக்கள் எல்லோரும் அதை கடைபிடிக்க, பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் எந்தவிதமான கவலையும் இன்றி வெளியே நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்களே இந்த கொரோனா வைரஸ்ஸை மக்களுக்கு கடத்துகிறார்கள்.

நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் சமுதாய விலகல் நடைமுறைகள் இருந்து வரும் நிலையில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்திய நாத் இன்று [புதன்] பொதுவெளியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை அவர் இந்த நாட்டின் மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருதினார்.ஆமாம் அந்த நிகழ்சியில்தான் ‘குழந்தை ராமர் விக்கிரகம்’ அயோத்தியில் உள்ள தற்காலிக ராமஜென்ம பூமி கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. ராமர்கோவில்  கட்டும் வரை விக்கிரகம் இங்கு இருக்கும் முகமாக இந்த மாற்றம் செய்யப்பட்டது.

மாநில மக்கள் மதரீதியான கூடுதல்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று யோகி ஆதித்ய நாத்  மக்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார், ஆனால் அவரே மத நிகழ்ச்சியில் பலருடன் கலந்து கொண்டுள்ளார். விதியை மீறி உள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டு  சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்து உள்ள நிலையில் உ பி முதல்வரே மீறி இருப்பது, முதல்வர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் போல் தெரிகிறது.உ.பி.யில் செவ்வாய் வரை 37 பேருக்கு கொரோனா பீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரத்திற்கு ராமர்கோயில் கட்ட ரூ.11 கோடி நிதிக்கான காசோலையை வழங்கினார். பல குருக்கள் முன்னிலையில் யோகி ஆதித்யநாத்தும் மந்திரங்களைக் கூறிய வீடியோவை அரசு செய்தி தொடர்பாளர் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

இந்தச் சடங்கை ட்விட்டரில் பகிர்ந்த யோகி ஆதித்யநாத், “மகா ராமர்கோவில்  கட்டும் பணியின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளது. மரியாதை புருஷோத்தமன் தார்ப்பாலின் டென்ட்டிலிருந்து புதிய பீடத்துக்குச் சென்றுள்ளார்” என்று ட்வீட் செய்துள்ளார்.

நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் கொரோனா ஆபாயத்தில் இருக்கையில் இப்படி பாஜக வினர் மதவிசயங்களை கையில் எடுத்து மக்களை முட்டாளாக்குகிறார்கள். இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top