முன்னேற்பாடுகள் ஏதுமின்றி திடீரென ஊரடங்கு அறிவிப்பு! மக்களை பெரும் அபாயத்தில் தள்ளி விட்டார் மோடி!!

திடீரென பிரதமர் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு. யாரும் வீட்டை விட்டு வெளியேவரக் கூடாது.கொரோனாவை எதிர்கொள்ள இதைத்தவிர வேறு வழி இல்லை  என்று அறிவித்து விட்டார்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 பேர் என்றும் ஒன்பது பேர் இறந்ததாக சொல்லப்பட்டாலும், உண்மையில் அதிகமான நபர்கள்  பாதிக்கப்பட்டிருப்பதுதான் உண்மை..கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிறார் பிரதமர்.சமூக இடைவெளியை சொன்ன பிரதமர் மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளி பெரிதாகிக்கொண்டிருப்பதை யோசிக்கவில்லை போலும்.

மக்கள் ஒவ்வொருவரும் சூழலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்கிற பிரதமர் மக்கள் 21 நாட்கள் வேலைக்கு போகாமல் எப்படி சாப்பிடுவார்கள்? ஊரடங்கு நாட்களுக்கான பொருளாதார பின்னனி என்ன? அதை எப்படி எதிர்கொள்வது? என்று யோசிக்கமாட்டார? குறைந்தபட்சம் எளிய மக்களுக்கான ரேசன் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கலாம்.எந்தவிதமான பாதுகாப்பு அறிவிப்பும் இன்றி ஊரடங்கை மட்டும் சொல்லிவிட்டு இப்படி பொறுப்பற்று பேசியிருப்பது மக்களை மேலும் காயப்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கடுமையான கோபத்தில் முகநூலில் பேச ஆரம்பித்து விட்டார்கள்  

மேலும்,கொரோனாவை எதிர்கொள்ள பதினையாயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது என்று பேசியிருக்கிறார். இது மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு மட்டுமே செலவழிக்கப்படும் என்பது ஒரு செய்தி. இந்த நிதி மக்களுக்கு ரேசன் கொடுப்பதற்கோ, நிவாரணம் கொடுப்பதற்கோ அல்ல!

21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் சொல்கிறார்.எப்படி ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அதற்கு என்ன திட்டம் மத்திய அரசு வழங்கி இருக்கிறது?எதுவும் இல்லாமல் வார்த்தை ஜாலம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது பிரதமர் பேச்சில்

இந்த முழு ஊரடங்கு  கொரோனா நோயை  விரட்ட என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் , அது புதிய பிரச்சனைகளை கொண்டு வரும் முக்கியமாக வேலையின்மை , அது கொண்டுவரும் உணவு பற்றாக்குறை , பட்டினி ,மருத்துவ பற்றாக்குறை, இது எல்லாம்சேர்ந்து  பெரும் குற்ற நிகழ்வுக்கு வழி வகுக்கும்.இதையெல்லாம் ஏன் அரசு யோசிக்கவில்லை.மக்கள் மீது உண்மையில் அக்கறை இருந்தால் இதையெல்லாம் சரி செய்து ஓரிரு தினங்களில் அறிக்கைகள் வந்தால் நன்றாக இருக்கும் .

சேவற்கொடியோன்

.கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top