நாடுமுழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல்21 நாட்களுக்கு ஊரடங்கு:பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனாவை எதிர்கொள்ள இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு. யாரும் வீட்டை விட்டு வெளியேவரக் கூடாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மீண்டும் உரையாற்றினார். மக்கள் ஒவ்வொருவரும் சூழலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.15000 கோடி கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினார்  

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 பேரை தாண்டி விட்டது. இதன் தீவிரத்தை குறைப்பதற்கே 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்

அவர் தனது உரையில் கூறியதாவது:

மக்கள் ஒவ்வொருவரும் சூழலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இந்திய மக்கள் கொரோனா வைரஸை் எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை உலகம் அறிந்து கொண்டது.ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாம் இந்த துன்பத்திலிருந்து விடுபட முடியும் .

ஒருவர் மூலமாக மற்றொருவருக்கு எளிதில் வைரஸ் பரவும். இதனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை ஒருபோதும் சகிக்க முடியாது. மக்கள் தங்கள் சூழலை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.

நாடுமுழுவதும் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதன் மூலம் முழு அளவில் கொரோனாவுக்கு எதிராக நாம் போராட முடியும். அடுத்த 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனாவை எதிர்கொள்ள பதினையாயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. என்று அவர் கூறினார்.

 

 கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top