கொரோனா தொற்று, சுய ஊரடங்கு: கோவில்கள் மூடப்பட்டதால் சாலையோரங்களில் திருமணங்கள்

நாடு தழுவிய சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் கோவில் முன் சாலையோரங்களில் திருமணங்கள் நடைபெற்றன.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இன்று நாடு தழுவிய சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக தமிழகத்திலும் பெரும்பாலான கடைகள், கோவில்கள் மூடப்பட்டுள்ளன.அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகம் முழுவதும் ஏராளமான திருமணங்கள் நடைபெற இருந்தன. ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் சில திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன. ஆனால் இன்று திருமணத்திற்கு உகந்த நாள் என்று கூறி சிலர் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

கடலூரில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் கோவிலுக்கு வெளியே சாலையில் வைத்து குடும்பத்தினர் சிலர் முன்னிலையில் வைத்து புரோகிதர் இல்லாமல் திருமணம் நடைபெற்றன.

திருநெல்வேலியில் உள்ள ஒரு கோவிலில் ஏழு திருமணங்கள் நடந்தன. ஒரு திருமணம் நடைபெற்று 15 நிமிடங்கள் கழித்து அடுத்த திருமணம் நடைபெற்றது. இந்த15 நிமிட இடைவெளியில் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டன. அதன்பின் அடுத்த திருமணம் நடைபெற்றது.

திருமணங்கள் நடைபெற்ற பின் கோவில் மூடப்பட்டது. திருமணத்தின்போது மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top