பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் 1,847 பேர் பாதிப்பு

பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 1,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து    பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ”பிரான்ஸில் சனிக்கிழமை நடந்த கணக்கீட்டின்படி கோவிட்-19 காயச்சலால் கடந்த 24 மணிநேரத்தில் 1,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,459 ஆக அதிகரித்துள்ளது.

1,587 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். கோவிட்- 19 காய்ச்சாலால் பாதிக்கப்பட்டவர்களில் 1,525 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கோவிட்-19 காய்ச்சலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் கோவிட் காய்ச்சலால் இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

தற்போதைய தகவலின்படி கோவிட்காய்ச்சல் காரணமாக உலகம் முழுவதும் 3,08,231 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top